பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

தமிழில் உள்ள கிஸ்ஸா இலக்கியங்களுள் மக்களிடையே மிகு புகழ் பெற்றனவாக ‘ஈசுபு நபி கிஸ்ஸா’, அலி (ரலி) கிஸ்ஸா’, ‘முகம்மது அனிபு கிஸ்ஸா', 'சைத்துான் கிஸ்ஸா', 'ஷம்ஊன் கிஸ்ஸா' முதலியனவாகும்.

தமிழிலுள்ள கிஸ்ஸா இலக்கியங்களிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படுவது 'இஸ்வத்து நாச்சியார் கிஸ்ஸா ஆகும். மிகவும் குறுகியதாகக் காணப்படுவது 'கபன் கள்ளன் கிஸ்ஸா'வாகும்.

ஈசுபு நபியின் வரலாற்றுச்சம்பவங்களை விடுத்துரைக்கும் 'ஈசுபு நபி கிஸ்ஸா' மக்களிடையே மிகப் புகழ் பெற்றதாக விளங்குவதோடு இலக்கியத் தரமிக்கப் படைப்பாகவும் கருதப்படுகிறது மதாறு சாஹிபுப் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் செய்யுள் நடையில் அமைந்துள்ளது.

இஸ்லாமிய மரபுப்படியும் திருமறையாம் திருக்குர் ஆன் படியும் முதல் மனிதர் ஆதாம் தொடங்கி, இறுதி இறைத்துள்தர் நபிகள் நாயகம்வரை உலக மக்களுக்கு வழிகாட்ட இறைவன் ஒரு லட்சத்து இருபத்திநான்காயிரம் நபிமார்களை உலகுக்கு அனுப்பியுள்ளான். அவர்களுள் யாகூப் நபியின் மகனாகப் பிறந்தவர் ஈசுபு நபி. அவரது வரலாற்றைக் கதைப் போக்கில் கூறுவதே 'ஈசுபு நபி கிஸ்ஸா.' திருமறையிலும் ஈசுபு நபி வரலாறு கதைப்போக்கிலேயே கூறப்பட்டுள்ளது.

இதனை இயற்றிய மதாறு சாஹிபுப் புலவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை எனும் ஊரைச் சேர்ந்தவர். இந்நூல் ஹிஜ்ரி 1170-ம் ஆண்டில் இயற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்நூலாசிரியர் பல் துறை அறிவும் வாய்க்கப்பெற்ற புலவர் என்பது இந்நூல் மூலம் நன்கு அறிந்துணர முடிகிறது.

தமிழக முஸ்லிம் பெருமக்களிடையே மிகப் பிரபலமாகப் பயிலப்பட்டு, அவர்களுடைய செல்வாக்குப்பெற்றுத்திகழும்