பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

மீண்டும் கயிற்றைத் தூக்கும்போது
     மிகுந்த கனங்கண்டு இருவர் தூக்க
நீண்ட கிணறுவிட்டு வெளியில் லநதார்
     நிலவு போதவாக் கொப்பிடாதே"

எனக் கூறுகிறார்.

இறைவனருளாலும் வானவர் தலைவர் ஜிபுரீலின் துணையாலும் மேலே வந்த ஈசுபைக் கண்ட வணிகர்கள் வியந்து நோக்கினர். அருளொழுகும் பார்வையையும் பேரின்னலிடையையும் அமைதி தவழும் முகத்தையும் கண்டு வியந்தனர். அருள் நலமிக்க சிறுவர் ஈசுபை தங்களுடனே கூட்டுச் செல்வதென முடிவு செய்து அழைத்துச் செல்லலாயினர். சென்ற வழியில் எதிர்ப்பட்ட ஈசு பின் சகோதரர்கள், ஈசுபு மீட்கப்பட்டது அறிந்து வெகுண்டனர். அவரைக் காப்பாற்றிய வணிகர்களிடம் அவரைப் பற்றி மிகத் தவறான முறையில் கூறமுனைந்தார்கள். ஈசுபு ஒரு திருடர் எனக் கூறியும்கூட அதனைச் செவிமடுக்காத வணிகர்கள தங்கள் சொந்தநாடான மிசிறு நாட்டிற்கு சிறுவர் ஈசுபை அழைத்துச் சென்றனர்.

மிசிறு நாடடைந்தபோது, ஈசுபின் மதிமுகம் கண்ட பலரும் தங்கள் பொறுப்பில் ஈசுபை வளர்த்து ஆளாக்க விரும்பி முன்வந்தனர். பெரும் பொருளிந்து ஈசுபை பெற விரும்பிய செல்வவளம் மிக்கவர்களிடையே வயது முதிர்ந்த மூதாட்டியொருவர், தான் நூற்ற நூலைக் கொண்டு ஈசுபைப் பெற விரும்பினாள். இதைக் கண்டு பணம் படைத்தோர் எள்ளி நகையாடினர். ஆயினும், அக் கிழவியினிடத்தே சென்று வாழ விரும்பி, அம்மூதாட்டியுடன் சென்றார்.

அறவழி ஒழுகும் மதிமுக ஈசுபு மிசிறு நாடுவந்து மூதாட்டியின அன்பான அரவணைப்பில் வாழுங்கால் மஃறிபு நாட்டு மன்னன் மகள் சுலைகா என்னும் பேரழகி.