பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

யுடன் கேட்டறிந்தான் தன் வாழ்க்கை வரலாற்றை ஈசுபு விரித்துரைத்ததை,

"விரும்பினார் முன்னங் கண்ணான்விட்டு
      வெளியே புறப்பட்ட நாள் முதலாய்த்
திரும்பிவந்த நாள் வரை நடந்த
      செய்தியாவையும் விளப்பினரே"

என மதாறுப் புலவர் கூறுகிறார்.

மன்னனின் பேரன்பைப் பெற்ற ஈசுபு நபியவர்கள் வணிகத்தில் தீவிரமாக ஈடுபட்டார். பெரும் பொருள் திரட்டினார். ஒரு நாள் தன் ஊரைச் சார்ந்த அரபு வணிகர் ஒருவரைக் கண்டு பெரு மகிழ்வெய்திய ஈசுபு நபி தன தந்தையாரின் நலம் விசாரித்ததோடு அவருக்கு சலாம் கூறுமாறு வணிகரை வேண்டிக் கொண்டார்.

வணிகம் செழிப்பாக நடந்தது. பெரும் பொருள் குவிந்தது. வருங்காலத்தின நிலையை முன்னறியும் ஆற்றல் மிக்கவராதலின். பெருமளவில் பொருளையும் உணவையும் மக்கள் நலன் கருதி சேமித்து வைத்தார். மிசிறு நாட்டின் வளமான ஏழாண்டுகள் உருண்டோடிய பின் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியது, மக்கள் பொருள் பற்றாக்குறையாலும் வறுமையினாலும் வருந்தினர். பசியும் பிணியும் மக்களை வாட்டின. இச்சமயத்தில் தான் சேமித்து வைத்திருந்த உணவுப் பொருட்களை பசியென்று வந்தோர்க்கு வரையாது ஈந்தார். வள்ளண்மை கொண்ட ஈசுபு பஞ்சத்தால் வறுமைவாய்ப்பட்டோருக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தார் இன்னல் மிகுந்த இச் சூழ்நிலையில் மிசிறு மன்னன் அசீசு மறைவெய்தினான் தடை நீங்கிய சுலைகா தான் கனவில் கண்டு காதலித்த ஈசுபு