பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

நபியவர்களை மணாளனாகப் பெற்றாள். நீண்ட நாள் கனவு நிறைவேறியதை எண்ணிக் களிமிகக் கொண்டாள் சுலைகா. இறையருளால் கருந்தொருமித்த இருவரின் இன்ப வாழ்வை மதாறுப் புலவர் அவர்கள்,

"தேனும் சீனியும் கலந்ததுபோல்
       சீரும் செல்வமுமாய் இருக்கும்போது
ஊனும் உயிரும்போல் ஒத்திருந்து
      உவந்த ஆண்டு அஞ்சில் பிள்ளையிரண்டாம்
ஈனம் அணுகாதல் இறையவனே
      இருவர் நாட்டமும் நிறைவேற்றினாய்
தீனில் ஈசுபு நபியின் கூட
 சுலைகாவுமே வாழ்ந்திருந்தார்"

என இறையருட் பெரும்பேறு பெற்றவர்களாய் அவர்கள் வாழ்ந்திருந்த பாங்கை அழகுறச் சித்திரிக்கிறார்.

ஈசுபு நபியவர்கள் செல்வ வளமும் இல்லற இன்பமும் ஒருசேரத் துய்த்துவரும் அதேசமயத்தில் அவரது சகோதரர்கள் கொடிய வறுமையில் கழன்று அல்லற்பட்டு வந்தார்கள். வறுமையின கொடுமை தாளாத அவர்கள் ஒரு நாள் தங்கள் தந்தையாரிடம் சென்று, தங்கள் பசித் துன்பத்தை எடுத்துரைத்தனர். பிள்ளைகளின் துயரநிலை அறிந்த தந்தை யாகூப் நபியவர்கள், வேற்றிடம் சென்று கம்பளி மயிர் விற்று தானியம் பெற்று வருமாறு பணித்தார். கம்பளி மயிர் விற்பான் வேண்டு மிசிறு பகுதியை அடைந்து விலை கூறி வரும்போது தங்கள் சகோதரர்களின் நிலைகண்டு ஈசுபு நபி வருந்தினார். தன்னைத் தன் உடன் பிறந்தோர் அடையாளம் கண்டுகொள்ள இயலா விடினும் மீண்டும் அவர்களை வரச் செய்து. தன்னை இன்னாரெனப் புலப்படுத்திக் கொண்ட தன் மூலம் சகோ-