பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

கலக்கமில்லா அதை ஜிபுரீல் வாங்கி
     நபியே நீர் கொஞ்சம் பால்மீந்ததால்
சிலுக்கு நரகத்தில் உம்மத் தோரில்
     சிறிது பேரைப் போட்டு அதாபு செய்வான்
எல்லாப் பாலையும் குடித்தீர் ஆகில்
     எல்லா உம்மத்தும சுவர்க்கம ஆவர்
சொல்ல ஜிபுரில் உரை கேட்டு
     துய்ய நபியுலலா பாலைக் கேட்டார்
வல்ல ஜிபுரில் அது அங்குரைத்தார்
    வரைந்து விளெளகுக்கு எழுத்தின்படி
இல்லையினிக் கேட்க வேண்டாம் என்ற
    ஏக நபியுல்லா தமக்கு உரைத்தார்,"

என செஞ்சொற் சித்திரமாகத் தீட்டிக் காட்டுகிறார் மதாறுப் புலவர் அவர்கள்.

வானவர் தலைவரின் உதவியுடன் விண்ணேகிய பெருமானார் ஒவ்வொரு வானமாய்ச்சென்று அங்கெல்லாம்வதியும் முதல் நபி ஆதாம், எஹியா நபி, ஈசுபு நபிஇஸ்மாயீல் நபி முதலியவர்களைக் கண்டு, சலாம் உரைத்து, அளவளாவி, தனக்கேற்பட்ட பல்வேறு ஐயப்பாடுகளையும் போக்கிக் கொண்டவராக இறைச் சந்நிதானத்தைப் பெருமானார் எட்டுகிறார்கள். நாயகத் திருமேனியிடம் அவர் வழியைப் பின்பற்றும் முஸ்லிம் உம்மத்துகளுக்கு நாள்தோறும் ஐம்பது வேளைத் தொழுகையைக் கடமையாக்கி வல்ல அல்லாஹ் பணித்தான். இதை அப்படியே ஏற்றுக் கொண்டு வந்தபெருமானார் இதனைப் மூஸா நபிகளிடம் கூற, அதைக் கேட்ட மூஸா நபி மிகக் கூடுதலான இத் தொழுகை எண்ணிக்கையைக் குறைக்குமாறு அல்லாஹ்விடம் மன்றாடுமாறு கூறினார். அதற்கொப்ப அல்லாஹ் விடம் அண்ணலார் மன்றாட , வல்ல நாயன்