பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள அருட்கொடை அவன் பெற்றுள்ள அறிவாகும் அதன் துணைகொண்டு இறைவனை அறிய அவன் அருட்டிறத்தை உணர்ந்து தெளிந்து, அல்லாஹ்வை நெருங்கும் வகையில் இறை வழிபாடு அமைய வேணடும் என்பதே இறை நாட்டம்.

மெய்யறிவாளன், தான் பெற்ற கல்வியின் வழி ஒழுகி பிறரையும் அவ்வாறு ஒழுகத் துாண்ட வேண்டும். 'கற்க, கற்றபின் நிற்க அதற்குத் தக' என்பது முதுமொழி. கல்வி யின் நோக்கமே வலல அல்லாஹ்வை வழுத்தி மேன்மை யுறுவது என்பதற்கு மாறாக, பணம், பதவி, புகழ் என கவர்ச்சிக்காகவே வாழ்ந்து, இறைவணக்க முறை மறந்து வாழும் அறிஞரும் எரிநர கிற் புகவேண்டியவரே என இறைத் தீாப்பு அமையும் எனக் கூறி அச்சுறுத்தி எச்சரிக்கை செய்கின்றார்.

இறைவன் திருமுன்பு இறுதித் தீர்ப்பை எதிர்நோக்கிய படி மண்ணாண்ட மன்னர்களும் மக்களை வழிநடத்திச் சென்ற தலைவர்களும் நிற்பர். இறைவன அவர்கட்குப் பெரும் பொறுப்புப உயரிய பதவி தந்தும் இறைவணக்கத்திலிருந்து வழுவி வாழ்ந்த அவர்களை நோக்கி நான் உங்கட்கு உயர் பதவி தந்தும் என்னை வணங்காதொழிந்தது ஏனோ? என வினவ, அதற்கு மன்னர்களும் தலைவர்களும், இறை தந்த உயர் பதவியின் விளைவாக அவர்களை கட்டுக்குள் வைத்து வாழச் செய்யவும், அவர்களிடையே எதிர்ப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு நெறிப்படுத்தவும், அவர்களுக்கு நீதி புரக்கவுமே இருக்கும் காலத்தைச் செலவிட நேர்வதால் இறை வணக்கம் செலுத்த நேரமோ, சிந்தனையோ இல்லாது போயிற்று. இதற்கு முக்கியக் காரணம் தலைமை என்ற பெரும் பொறுப்பைத் தங்கள் மீது இறைவன் சுமத்தியதுதான் என பழியை இறைவன் மீதே சுமத்தி திறமையாகத் தப்பிக்க முயலும்போது இறைவன்.