பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჯ0

யாவர் என்னும் கருத்தில் மிக்க வேறுபாடு உள்ளது என்பதும் ஈண்டுக் குறிககத்தக்கது" பதினெண சித்தா ஞானக் கோவை’ என்ற பெயரில் உலாவிக் கொணடிருக்கும் தூலைத தொகுத்தவர் யாா எனத தெரியவில்லை. மிகத்தொண்மையான சித்தர்களின் அரிய பாடல்களையெல்லாம் விட்டுவிட்டு அண்மைக காலத்தில் ஞானிகளின் மிகச சாதாரண பாடல்களையெல்லாம தொகுத துள்ளனர் பதினெண் சித்தர்பாடல் என்ற பெயரில சுமார் நாற்பது பேருடைய பாடல்களைத் தொகுத்துள்ளனா.

தெற்கே ‘பதினெண் சித்தர்கள்’ என்னும் மரபு இருப்பது போலவே, வடக்கே நவநாத சித்தாகள' என்னும் மாபும் இருந்து வருகிறது. ஆலை சூஃபிகளைப் பொருத்த வரையில் இப்படி யொரு எண்ணிக்கையோடு கூடி வழங்கும் மரபு இருப்பதாகத் தெரியவில்லை.

இஸ்லாமிய சூஃபிகளையும், தமிழ்ச் சித்தர்களையும் இணைத்து ஆராய்வதன் முன்னம் சூஃபிகளைப்பற்றிப் பொதுவான சில கருத்துககளைச் சுருக்கமாகக் காண்பது அவர்களைப்பற்றித் தெளிந்த அறிவு பெறத் துணை செய்யும்.

சூஃபி-தத்துவம் சூஃபி நெறியினர் கடவுள் ஒருவனே என்னும் ஒரு தெய்வவாதிகள். அவர்கள் தங்கள் கொளகையை ‘வுஜீதி' என்றும் ஷஹீதி’ என்றும் கூறுவர். கடவுள் ஒன்றே உள்ள பொருள் எனனும் கொள்கையின ஒருவகையே இது இந்த இரண்டு கருத்துக்களும் முறையே இந்துமத அத்துவிதத்தையும், விசிஷ்டாத்துவிதத்தையும் போன்றவையாகும். இததகைய ஒன்றேயான பரம்பொருளின தன்மையைபபற்றி இன்சானுன் காமில்’ என்னும் நூல் கூறுவதாவது 'அவன் சகல பொருள் களிலும் அந்தர் யாமியாக உள்ளான். அவனது முழுமைத் தன்மை உலகிலுள்ள ஒவவோர் அணுவிலும் காணப்பெறும். இப்படி எல்லாப் பொருளகளிலும் ஊடுருவி நிற்கும் தன்மையின் ரகசியம் யாதெனில் அவன் உலகைத்தன்னிடமிருந்தே படைத்தது தான் உலகு பனிக்கட்டி போன்றது கடவுள் பனிக்கட்டிக்குக் காரணமான நீர்போனறவன. பனிக்கட்டியின் உணமையான பெயர் நீாதான, நாம்தான அதைப் பனிக்கட்டி என்று கூறு கிருேம்.’’

ஆன்மா சடப்பொருளினின்றும் விடுதலை பெற்று மீண்டும் பரம்பொருளுடன் கலக்க வேண்டுமானல் அது நானகு படிகளைக் கடக்கவேணடும்.