பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

ஆன மா தன்னைச் சுற்றியுள்ள தத்துவங்களை விட்டுத் தனித்த நிலையே தனிநிலை-வெளிநிலை, இந்நிலையில் வேறு ஒன்றுமே இருக் காது ஆன்மா மடடுமே-"நீயும் நானுமாய ஏகபோகமாய், இருக்கும் சாயுச்சியநிலை.

பட்டிப் பசுக்கள இருபத்தி நாலுளி குட்டிய பசுககளோ ரேழுள ஐந்துள குட்டிப் பசுககள குடப்பால் சொரியினும் பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே

-2834: திருமந்திரம்

இருபத்தி நான்கு ஆன்ம தத்துவத்தையும், ஏழு வித்தியா தத்து வததையும்: ஐந்து சிவதத்துவத்தையும் இங்குத் திருமூலர் குறிக் கின்ருர், இந்த முப்பத்தியாறு தத்துவங்களையும் இராமலிங்க அடி களார் முறையே மலரோன் தத்துவம், மாலோன் தத்துவம், சுத்த தத்துவம் எனக் குறிக்கின்ருர்.

'தஞ்சந் தரும்லரோன் றத்துவமாம பூதங்க ளஞ்சும் பொறியஞ்சு மஞ்சறிவு-மஞ்செனுமோர் வாக்குமுத லஞ்சுமற்று மாலோன்றன் றத்துவமா மூககுங் கலைமுதலாமோசேழு-நீக்கியப்பால மேவி விளங்குசுத்த வித்தைமுத தைமட்டுக் தாவி வயாங்குசுத்த தத்துவத்தின்-மேவியகன் றபபா வருளகண் டருளாற் றமைத்தாங்கண் டப்பாற் பரவெளி கண்டு அப்பாலுக் கப்பாலும்

  • ,

-680-683 நெஞ்சறிவுறுத்தல்-திருவருட்பா

என வருதல் காண்க

ஆன்மாவைச் சதசித்து என்பர். சத்தும் அன்று, அசத்தும் அன்று என்பது இதன பொருள். சார்ந்ததன் வண்ணம் பெறும் ஆன்மாவின் இயல்பு தனித்திருத்தல் அன்று. தத்துவங்கள் சூழ நின்ற ஆன்மா அவற்றின வயமாக நிற்கும். அந்நிலையையுடைய ஆன்மாவில்ை தத்துவாதீதமாகிய இறையை அடைதல் இயலாது, அறிவிக்க அறியும் அறிவுபெற்ற ஆன்மா தன்னைச் சூழ்ந்த தத்து வங்கள் அனைத்தையும் தனித்தனியே கடக்கும். இவை அனைத்தும் கடந்த அதீதநிலையே-தத்துவ்ாதீத நிலை என்பர். இதனையே "தனித்திருத்தல் என்றும்-வெளியிலிருத்தல்' என்றும் குறிப்பர்.