பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

151


கேட்க முடிகிறது. மற்றபடி ரஜனி தன் தலையில் ஒரு மூட்டை பளுவைத் தூக்கி வைத்திருக்கிற இறுக்கத்துடன் வயதான ரோலில் சிரமப்படுவது பாவமாயிருக்கிறது. முன்பெல்லாம் 'மார் ஆட்டி' டான்சுகளை வில்லிகள்தாம் ஆடுவதுண்டு. இப்பொழுது கதாநாயகிகள் ஆடுவது கவனிக்கத்தக்க ஒரு முன்னேற்றம்!'

இவ்வாறே கிண்டல் தொனியிலும், காரசாரமாகவும், செய்தி, ரிப்போர்ட், மியாவ் என்ற தலைப்புகளில் பல தகவல்களை-அபிப்பிராயங்களை-சூடான எண்ணங்களை 'விழிகள்' தந்தது.

சோதனை ரீதியிலான சிறுகதைகளையும், புதுக் கவிதைகளையும் வெளியிட்டது. பாரதி நூற்றாண்டு விழா சமயத்தில் 1982 ஜனவரி இதழை 'பாரதி மலர்' ஆகத் தயாரித்தது.

தெருக்கூத்து, பகல் வேஷம் ஆகிய மக்கள் கலைகளின் ஆய்வு தொடர்பான கட்டுரைகளைப் பிரசுரித்தது.

‘விழிகள்' குறிப்பிட்ட காலத்தில் தவறாது வெளிவர வேண்டும் என்று ஆசைப்பட்டது. 'வரும்' என அடிக்கடி உறுதி கூறியது. எனினும், காலம் தாழ்த்தி, நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகேதான் ஒவ்வொரு இதழும் வருவது சாத்தியமாக இருந்தது.

1983- ல் 'விழிகள்' ஒரு இதழ்கூட வந்ததாகத் தெரியவில்லை.