பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

171


ஒரு வழக்கமாகிவிட்டது. இம் முயற்சிகள் இளவேனில் ஆர்வத்தையும் ஆற்றலையும் புலப்படுத்துவனவாகும்.

பிரச்னை

‘சாதாரணத் தொழிலாளிகள் சில பேர் சேர்ந்து' வெகு ஜனங்களை எட்டக் கூடிய வகையில்- தொழிலாளர்களும் விவசாயிகளும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நோக்குடன்- முற்போக்கு மாதமிருமுறை பத்திரிகை ஒன்றை நடத்தினார்கள். முதலில் அதன் பெயர் 'பிரச்னை' என்று இருந்தது.

ஆரம்பத்தில் ஆசிரியர்கள் : ஆர். சாம்பசிவம், எஸ். இசக்கிமுத்து என்று அறிவிக்கப்பட்டது. சில இதழ்களுக்குப் பிறகு தெ. சண்முகம் ஆசிரியர் என்றும், முந்திய இருவரும் இணை ஆசிரியர்கள் எனவும் அறிவித்தார்கள்.

முதல் இதழ் 1972 அக்டோபரில் வெளிவந்தது. 10வது இதழ் முதல் அது பெயர் மாற்றம் பெற்றது. பிரச்னை 'உதயம்' ஆயிற்று.

‘இலக்கியம் என்பது வாழ்க்கையிலிருந்து தோன்றியது. வாழ்க்கையைக் கண்டு சொல்வது. வாழ்க்கையைக் கண்டு சொல்வதோடு நின்று விடாது, அதை மாற்றியமைக்கவும் தூண்டுவது. புதிய வாழ்க்கைக்கு உட்படுத்துகிறது' என்ற அடிப்படையில் கதைகள், கவிதைகள், கட்டுரைகளை இந்த ஏடு வெளியிட்டது. சமூகப் பிரச்னைகள், அரசியல் விஷயங்கள், கலை மற்றும் இலக்கிய விஷயங்கள் பற்றி எளிய நடையில் விளக்கமாகவும் தெளிவாகவும் கருத்துக்களை எடுத்துக்கூறியது.

அஸ்வகோஷ் (ஏ. ஜி.) கதைகள், கவிதைகள், கட்டுரைகள் அதிகம் எழுதினார்.

மாவேலி ஜாப்ஸன், ஆத்மாநாம், அக்கிணிபுத்திரன் முதலிய பலரும் இதில் கவிதைகள் எழுதியுள்ளனர்.

வியாபார நோக்குடன், லாபத்தையே கருத்தில் கொண்டு, நடத்தப்படுகிற ஜனரஞ்சகப் பத்திரிகைகளின் போக்கை- வாசகர்களின் மனசையும் பண்பையும் கெடுக்கக் கூடிய தரக் குறைவான எழுத்துக்களையும் சித்திரங்களையும் வெளியிடும் இயல்பை-1970 களிலேயே பிரச்னை-உதயம் வன்மையாகக் கண்டித்தது.

இன்றைய வாரப்பத்திரிகை சினிமா, அரசியல் அனைத்தும்