பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

335


தமிழ் நாவல்களையும், சமூக— பொருளாதாரப் பிரச்னைகளையும் மார்க்ஸியக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்யும் கட்டுரைகளை ஆராய்ச்சி வெளியிட்டது. நா. வா. இறந்த் பிறகு தேங்கி நின்ற ’ஆராய்ச்சி’ இதழ், எண்பதுகளில் நா. வா. ஆராய்ச்சிக் குழுவினரால் மீண்டும் கொண்டுவரப்பட்டது. இதழின் பெயரை அவர்கள் ’நா. வா. வின் ஆராய்ச்சி’ என்று மாற்றிக்கொண்டார்கள். இக் காலாண்டிதழ், தரமான விஷயங்களைத் தாங்கி இப்பவும் வந்துகொண்டிருக்கிறது.

மார்க்ஸியப் பார்வையுடன் சோஷ்யலிஸ்ட் ரியலிச இலக்கியம் படைக்க முயல்கிற முற்போக்கு எழுத்தாளர்களை ஊக்குவித்து, முற்போக்கு இலக்கியப் பணிபுரிகிற ’தாமரை’, ’செம்மலர்’ பத்திரிகைகள் தங்கள் பணியை வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கின்றன.

அவை காட்டிய வழியில் தோன்றிய பத்திரிகைகளில், ’புதிய பாசறை’ குறிப்பிடத் தகுந்தது. கவிஞர் பாரதிவிஜயன் ஆசிரியர். காஞ்சிபுரத்திலிருந்து வெளிவந்த இந்த இதழ் நல்ல கதைகளையும் சிந்தனைக் கட்டுரைகளையும் பிரசுரித்துள்ளது.

முற்போக்கு அம்சங்களுடன் தீவிரமாகச் செயல்படுகிற மனஓசை, புதிய கலாசாரம், கேடயம் போன்ற பத்திரிகைகளும் வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகின்றன.

இலக்கிய வளத்துக்கும் படைப்பாளிகளின் வளர்ச்சிக்கும் பெரிதும் துணைபுரிந்துள்ள ’தீபம்’ பத்திரிகை அதன் இருபத்து மூன்றாவது ஆண்டில் நின்றுவிட நேரிட்டது. மிகுந்த சிரமத்தோடு வளர்ந்து வந்த ‘தீபம்’ ஆசிரியர் நா. பார்த்தசாரதி திடீர் மரணம் அடைந்ததும், 1987—ல் ஒன்றிரண்டு இதழ்கள் வெளியிட்ட பிறகு, ஒடுங்கி விட்டது

மற்றொரு இலக்கிய இதழான ‘கணையாழி’ வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடி வருகிறது. சமீபத்தில் அது உருவ மாற்றம் பெற்று, இலக்கிய வளர்ச்சிக்கு நன்கு பணிபுரிகிறது.

எண்பதுகளில் நின்றும் தோன்றியும், சிரமங்களுடன் வெளிவந்தலட்சிய நோக்குடன் நடத்தப்பட்ட—பத்திரிகைகளில் ’புதிய நம்பிக்கையும்’ ஒன்று. பொன்விஜயன் ஆசிரியராக இருந்து நடத்தும் இந்த இதழ் 90 களில் புதிய உருவ அமைப்பும் புதிய வேகமும் பெற்று வெளிவருகிறது.

நாடகத்துக்கென்று கவிஞர் புவியரசு நடத்திய ’காற்று’ எண்பதுகளின் பிற்பகுதியில் மீண்டும் புதிய உற்சாகத்துடன் தோன்றியது. நாடகக் கலை பற்றிய கட்டுரைகள், புதிய நாடகங்களை வெளியிட்டது. இம்முறையும் அது நீடித்து வளர முடியவில்லை.

ரெங்கராஜன் நாடகத்துக்கென்றே தனிப் பத்திரிகையாக ’வெளி’ என்ற காலாண்டிதழை நடத்துகிறார். சென்னையிலிருந்து வெளிவரும் இந்த இதழ் சிறப்பாக விளங்குகிறது.

கவிஞர் மீரா சிவகங்கையில் ‘கவி’ என்ற காலாண்டிதழை ஆரம்பித்திருக்கிறார். கவிதைகள், கவிதை நூல்களின் விமர்சனம், கவிதை பற்றிய கட்டுரைகளோடு வெளிவரும் நல்ல பத்திரிகை இது.

புதுக்கோட்டையில் ’ஒரு’ என்ற சிற்றிதழ் தோன்றி, நான்கு