பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

வல்லிக்கண்ணன்


உண்டு என்று மிடுக்காக ஆசிரிய அறிவிப்பு கொடுப்பதே சம்பிரதாயமாக இருக்கிற பத்திரிகை உலகத்தில்-

‘கதை, கட்டுரை, கவிதை இத்யாதியில் நான் கத்திரி போடமாட்டேன். அனுப்பி வைப்பதை முழுசாக வெளியிடுவேன். ரொம்பவும் இக்கட்டு என்றால் முழுசாக வாபஸ் பண்ணுவேன். எடிட்டிங் சமாசாரங்கள் எல்லாம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது- தெரியாது என்று சதங்கை ஆசிரியர் அறிவித்தார். இது மிகவும் தனித்தன்மையான ஒரு போக்குதான்.

இதைப் பயன்படுத்திக்கொண்டு, சில எழுத்தாளர்கள் விமர்சனம் என்ற பெயரில், படைப்புகளை விட்டு விட்டு படைப்பாளிகளைத் தாக்கி எழுதவும்- 'விமர்சன சுதந்திரம்' பற்றிப் பேசவும் முற்படவே-அவர் 'எடிட் செய்வேன்’ என்று அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்!

அவருடைய தீர்மானத்தை வரவேற்றும் பாராட்டியும் 'இதை நீங்கள் முன்பே செய்திருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டும், பல இடங்களிலிருந்தும் வாசகர்கள் எழுதியிருக்கிறார்கள்

ஒரு பத்திரிகைக்கு இலக்கியத் தரம் ஏற்படுவதும் இலக்கியப் பத்திரிகையின் தரம் உயர்வதும், அதில் எழுதுகிற எழுத்தாளர்களைப் பொறுத்தும், பிரசுரமாகிற படைப்புகளின் தன்மையைப் பொறுத்தும் அமையும்.

நாகர்கோவில், திருவனந்தபுரம் எழுத்தாளர்களின் ஒத்துழைப்பு ‘சதங்கைக்கு' நிறையவே இருந்தது. தமிழ்நாட்டின் இளைய எழுத்தாளர்கள் பலரும் உற்சாகமாகச் சதங்கைக்கு எழுதியிருக்கிறார்கள்.

ஆகவே, வனமாலிகை, ஐந்தாவது ஆண்டின் முதலாவது இதழில் சரியாகவே தெரிவித்திருக்கிறார்-

'தமிழ் இலக்கியத்தை சதங்கை தாங்குவதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. பசுமையோ வறட்சியோ இருந்தால் அது படைப்பாளிகளின் பக்கமே நீங்கள் விரலை நீட்டவேண்டும். ஆகவே, சாதித்தவைகளைப் பற்றிப் பேச்சில்லை.

‘வரும் ஆண்டுகளில் கணிசமான அளவுக்குச் சாதனைகள் புரிய