பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 உலகம் நடைபெறுகிறது. முயற்சியின்றி இருத்தல் சோம்பித்திரிதல் முதலிய பண்புகள் மனிதனை மற்றவர்கட்குச் சுமையாக்கிவிடும். சோம்பித் திரிபவன் 'மண்ணுக்குப் பாரம்' என்றார் முன்னோர் ஒருவர். கல், சுவர் போன்றவை எத்தொழிலும் செய்வதில்லை. அவை உயிரற்றவை. தொழிலில் ஈடுபடாமல் இருப்பது உயிர் வாழாதிருப்பதற்கு ஒப்பாகிறது. செயல் புரிபவர்களுக்கும், செத்தவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் மிகவும் குறைவு. செத்தவர்களுடைய உடலைப் பிணமென்று சடங்கு செய்து புதைத்தோ எரித்தோ விடுவதால் உடல் மறைந்துவிடுகிறது. சோம்பித் திரிபவனின் உடல் கண்ணுக்குத் தென்படுகிறது. அவன் ஊன்பொதி. உடலை ஓம்புவது கீழோர் மேலோர் என யாவர்க்கும் பொதுவானது. உடல் வளர்ச்சியை வைத்துத் தக்கார், தகவிலர், நல்லவர். தீயவர் என எந்த வேற்றுமையையும் இயலாது. வினையாற்றும்போதுதான் அவரவர் தரம் வெளிப்படும். விதைகள் விதைகளாயிருக்கும்போது அவற்றிற்கிடையே உள்ள தரவேறுபாடு எளிதில் யாருக்கும் புலப்படுவதில்லை. 'முளைத்து வளர்தல்' என்னும் வினை நடக்கும்போது அவற்றின் வலிவும் பொலிவும் தெரியவரும். வினைபுரியாதவன் வாழ்வு இன்றும் மேன்மை மறைகிறது. ஆகவே தோற்றத்திற்கு வந்த உயிர்கள் ஏதேனும் ஒரு தொழில் புரிந்து மேல் நிலையை அடைய வேண்டியது கடமையாகிறது. உயிர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையாகிறது. காண வினை விழைவதால் அல்லது வினைப்பயனை உணர்ந்ததால் சாதாரண மக்கள் கர்மத்தில் ஈடுபடுகின்றனர். ஞானம் அடைந்தவர், ஆசை அறுத்தவர் ஆயினும் இந்த உலகிற்கு நல்வழிகாட்டும் கடமையை மேற்கொண்டிருப்பதால், அவர்களும் வினை புரிய வேண்டியிருக்கிறது. சான்றோரையும், அருளாளர்களையும் ஞானியரையும் பின்பற்றி உலக மக்கள் நற்கதி அடைவர். இதுவே ஞானியர் கர்மத்தால் விளையும் பயனாகும். வினை எச்சத்தால் உடலை முகந்து கொண்ட ஒருவன் எந்தவிதமான கர்மத்திலும் ஈடுபடாது வீணில் வாழ்வதைவிட, பற்றுடன் ஒரு வினையைப் புரிவது ஒரு விதத்தில் நன்மை பயக்கும். பயன் கருதாது வினையாற்றுதல் என்பது எல்லோருக்கும் பொருந்தாது. பெரும்பாலான மக்கள் ஏதேனும் ஒரு ஆதாயம் இருத்தலால்தான் தொழில் செய்கின்றனர்.