பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மேலும் மேலும் தொழிலிலே ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். எந்தவிதப்பற்றும் இல்லாதவர் இம்மை மறுமை இன்பங்களை அடைவார்கள் என்பது நம்பிக்கை. மறுமையின்பம், பரமார்த்திகப் பெருவாழ்வு என்பதை எல்லோருக்கும் புகட்ட முடியாது. எல்லோரும் அதற்கு அருகதை உடையவர்களாக இருக்க இயலாது. இவ்வுலகில் வாழ்வதற்கு வேண்டியவைகளைப் பெற்று இன்பம் துய்க்க வேண்டியாவது அவர்கள் கர்மம் புரிய வேண்டும். இந்த உலகத்தைப் பலமாக்க வேண்டும். 'ஞானியர் புரியும் கர்மம்' கலங்கரை விளக்கமாக நின்று ஒளிகாட்டி அழைத்து 'மக்கள் வாழ்வு' என்னும் கப்பல் கரையை அடைய உதவுகிறது. செடிகொடிகள் தம்தம் இயல்புக்கு ஏற்றவாறு ஓங்கி வளர்கின்றன. படர்கின்றன. அவைகள் இனிப்பதும் கசப்பதும் புளிப்பதும் துவர்ப்பதும் போன்றவை அவகைளின் வழி வழி வந்த இயல்புகளின்படியே. அவைகளின் இயல்பைத் தடுப்பது பெரும்பாலும் இயலாது. அப்படித் தடுத்தால் அவைகளின் வளர்ச்சியைத் தடுப்பதாகும். இயல்புக்கு ஒப்ப ஓங்கி வளரும்படி உதவுவதே சாலச்சிறந்ததாகும். மனிதர்களுக்கிடையேயும் வெவ்வேறு இயல்புகள் இருக்கின்றன. இயல்புக்கு ஏற்றவாறு கர்மங்களும் மாறும். முயற்சிகளும் வேறுபடும். அவர்கள் இயல்பைத் தடுப்பதும் வளர்ச்சியை வீணாக்காமல் அவரவர் மனப்போக்கின் படியே வினையாற்றி முன்னேற்றமடைவதும் சிறந்ததாகும். ஒரு மனிதன் இந்தப் பிறவியினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட இயல்பைப் பெற்றுவிடமுடியாது. ஒரு மனிதனின் அப்பன், அவனுடைய அப்பன், அவனுடைய அப்பன் என்று எண்ணிப்பார்த்தால் ஒரு மனிதனுடைய குணவேறுபாடுகளோ இயல்புகளோ அவனுக்கு மட்டுமே உரியன அல்ல. அவன் முன்னோரின் காரணமாகவும் அமைகின்றன. தற்போது பட்டினத்தடிகள் பாடல் ஒன்றை நினைவுகூர்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். அன்னை எத்தனை எத்தனை அன்னையோ அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ முன்னம் எத்தனை எத்தனை சென்மமோ மூடனாய் அடியேனும் அறிந்திலேன் இன்னும் எத்தனை எத்தனை சென்மமோ என்செய்வேன் கச்சி யேகம்ப நாதனே.