பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.வினைப்பயன் தத்துவம் (கன்மம்) மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் தொடர்ந்து வினையாற்றிக் கொண்டேயிருக்கும் பெற்றி உடையவன். வினை எனினும் தொழில் எனினும் ஒன்றே. தத்துவ உலகில் இது கன்மம் அல்லது கருமம் எனப்படும். நாம் செய்யும் செயல்கள் யாவும் கன்மங்களே ஆகும். கன்மம் என்பது ஒரு செயலின் நோக்கம், பலன், அப்பலனை அனுபவித்தல் ஆகிய மூன்றையும் குறிக்கும். அனுபவிப்பதும் ஒரு செயலாகும். செயல் மட்டுமின்றி எண்ணம், சொல் ஆகியவை கன்மத்தில் அடங்கும். எல்லாச் செயல்கட்கும் பலன் உண்டு. அப்பலன்கள் யாவும் செய்தவனையே சென்று அடையும். சில செயல்களின் பயன்கள் உடனேயே சேரும். சில செயல்களின் பலன்கள் சிலகாலம் சென்று சேரும். இந்த உண்மைகளைப் பொதுவாக எல்லோரும் ஒத்துக்கொள்வர். எல்லா உயிர்களும் இன்பத்தையே விரும்புகின்றன. எனினும் அவை துன்பத்தையும் நுகர நேரிடுகின்றன. சிலருக்குத் தாம் தொடங்கும் செயல் எதுவாயினும் அஃது இனிதே முற்றுப்பெறுவதற்குரிய சூழ்நிலைகளே தொடர்ச்சியாக அமைந்துவிடுகின்றன. எனினும் வேறுசிலருக்குத் தொடங்கும் செயல்கள் அனைத்திலும் அவை தடைபடுவதற்குரிய சூழ்நிலைகளே அமைகின்றன. அன்றியும் ஒருவருக்கே சிலகாலம் தொடர்ச்சியாக நல்ல சூழ்நிலைகளே அமைவதையும், பின்பு சிலகாலம் தீமையான சூழ்நிலைகள் அமைவதையும் காண்கின்றோம். இவற்றால் இன்ப துன்பங்களுக்குச் சூழ்நிலைதான் காரணமாயினும் அச்சூழ்நிலைகளின் என்பதை அமைப்பிற்குக் காரணம் வேறொன்று உள்ளது உய்த்துணரவேண்டும். அந்தக் காரணம்தான் 'வினை' அல்லது 'கன்மம்' என்று மெய்விளக்க அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது. முயற்சி உடையவர் செல்வத்தையும். முயற்சி இல்லாவதர் வறுமையையும் அடைவர் என்பது ஒரு பொதுவிதி வள்ளுவர் பெருமானும்