பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 'இருவினைப்பயனும் செய்தவனையே சென்றடைவதற்கு ஏதுவான நியதி' எனப் பொருளுரைப்பர் பரிமேலழகர். மேலும் அவர் ஊழ். பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி ஆகிய யாவும் ஒரே பொருளுடைய சொற்கள் என்றும் தெரிவிப்பர். தொல்காப்பியர் ஊழைப் 'பாலறிதெய்வம்' என்று றிப்பிடுவார். நாலடியாரில் சமண முனிவர், பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாந் தாய் நாடிக் கோடலைத் தொல்லைப் பழவினையும் அன்னதகைத்தே தற்செய்த கிழவனை நாடிக் கொளற்கு (நாலடியார் 110} என்று வினையின் வலிமையை விளக்குவார். ஊழை நினைத்தால் சிலப்பதிகாரம் நினைவிற்கு வராமல் போகாது. ஊழின் வலிமையை வற்புறுத்துவதற்கு என்றே எழுந்த காவியம். 'ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்' என்பதைக் கோவலனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன. கோவலன் இப்பிறப்பிலே யாதொரு தீங்கும் செய்யவில்லை. என்பது அடைக்கலக்காதையில் புலப்படுத்தப்படுகிறது. இம்மைச் செய்தது யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒரு தனி உழந்து இத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது? என மாங்காட்டு மறையோன் கோவலனைப் பரிவுடன் வினவுகின்றான். இப்பிறப்பிலே தீங்கு செய்யாத கோவலன் கொல்லப்படுகின்றான். முற்பிறப்பில் களவு செய்யாத ஒருவனைக் கள்வன் எனக்கூறிக் கொல்வித்தான். அத்தீவினையின் பயனையே இப்பிறப்பில் அனுபவிக்கின்றான். வழக்குரை காதையில் கண்ணகி பாண்டிய மன்னன் அவையிலே, ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப்புகுந்து என்காற்சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால் கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி கண்ணகி என்பது என் பெயரே என்று தான் யாரென்று கூறுவதில் "ஊழ்வினை துரத்த வந்தேன்" என்று குறிப்பிடுகின்றாள். பாண்டியன் ஏன் ஆராயாது கோவலனுக்கு மரண