பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டனை வழங்கினான்? பாண்டியனுக்கும் வினைப்பயன் அதுவாகவே இருந்தது. வினை விளை காலம் ஆதலின் யாவதும் சினை அலர் வேம்பன் தேரான் ஆகி ஊர் காப்பாளரைக் கூவி ஈங்கு என் தாழ்பூங்கோதை தன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கையதாகில் கொன்று அச்சிலம்பு கொணர்க ஈங்கு 105 என அவசரமாக ஆணையிட்டான். அதன் பயனாகத் தானும் உயிர்விட நேர்ந்தது. 'வினை விளை காலம்" கோவலனையும் பாண்டியனையும் கொன்றுவிட்டது. ஒவ்வொருவரது வாழ்விலும் நடைபெறும் இன்ப துன்ப அனுபவங்களாகிய நிகழ்ச்சிகள் யாவும் ஒரு விழாவில் முன்னரே அமைக்கப்பெற்ற நிகழ்ச்சி நிரலின்படி நிகழ்வது போல நிகழ்ந்து வருகின்றனவா? எண்ணிப் பார்க்க வேண்டிய வினா. கைகேயியின் கூடாத செயலால் இலக்குவன் மனங்கொதித்து வெகுண்டெழுகிறான். இதற்குக் காரணமானவர் அனைவரையும் வெட்டி வீழ்த்துவேன்; யாரும் என்முன் வந்து தடுக்க இயலாது என்று வீறு கொண்டெழுகிறான். கலங்கா நிலையுடைய இராமன் இலக்குவன் தோள்மீது கைவைத்து, நதியின் பிழை அன்று; நறும்புனல் இன்மை அற்றே; பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தான்; மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்தா! விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான் இலக்குவன் மனம் அடங்கினான். அருணந்தி சிவாச்சாரியார் அவர்களும், பேறிழ வின்பமோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும் ஆறும்முன் கருவுட்பட்டது; அவ்விதி அனுபவத்தால் ஏறிடும் என்று கன்மத்தை விளக்குவார். கன்மம் எனப்படுகின்ற வினையின் வழியே வாழ்க்கைப் போக்கு அமைகிறது என்பதைப் புறநானூற்றுப் பாடல் மிகவும் அழகாக விளக்குகிறது.