பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 ஒப்படைக்கிறது. சீவாத்மா பரமாத்மாவோடு செல்லும் சமயத்தில் மாயையானது மலம் என்னும் பெயர் பெறுகிறது. பிரபஞ்சம் முழுவதும் கர்ம சொரூபம். "வினையே ஆடவர்க்குயிரே" என்று கூறுகிறது சங்கத் தமிழ். கர்மம், வினை, செயல் என்பன எல்லாவற்றிற்கும் அர்த்தம் ஒன்றே. சீவாத்மனுடைய மனிதனுடைய முன்னேற்றத்திற்குத் தவிர்க்க முடியாத துணையாய் இருப்பது வினை (கர்மம்). சிலர் கன்மம் என்றும் கூறுவர். கன்மம், கருமம், செயல் யாவும் ஒன்றே. மனம், மொழி, உடல் ஆகிய மூன்றாலும் நிகழ்வன எல்லாம் கர்மமே. பக்தியில் ஈடுபடுதலும், ஞானத்தைத் தேடுதலும் கர்மத்தின் பண்பட்ட செயற்கூறுகளாகும். சீவாத்மா, பரமாத்மாவில் ஒன்றுபடுகிறபோது கர்மம் முடிவு பெறுகிறது. அத்தறுவாயில் அதற்கு மலம் என்னும் பெயர் வருகிறது. சீவாத்மனைப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கின்ற போது கர்மம் மலமாகாது. மாயா காரியமான இந்தப் பிரபஞ்ச வாழ்க்கை மனிதனுக்கு நிலையானதன்று. இப்பிரபஞ்சத்தைக் கடந்து போக வேண்டும் என்னும் கோட்பாடு எல்லா மதங்களுக்கும் பொதுவானது. செத்தபிறகு சீரும் சிறப்பும் அடைவதைப் பற்றிய நம்பிக்கை ஒவ்வொரு மதவாதியிடமும் காணப்படுகிறது. மேலும், இவ்வுலகில் வாழும்போதே மனிதன் எப்படியெல்லாம் முன்னேற்றமடையலாம் என்பதையும் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகக்கூறி வைத்துள்ளன. மதங்களின் வெவ்வேறான கண்ணோட்டங்கள், போக்குகள், பிணக்குகளை உருவாக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. ஒரு மதத்தை இன்னொரு மதத்தைக் கொண்டு அளத்தல் நன்றன்று. எந்த ஒரு மதத்திற்கும் எந்த ஒரு மதமும் அளக்கும் கோல் ஆகாது. சீர்தூக்கிப் பார்க்கும் தராசு ஆகாது. இதை எல்லோரும் கருத்தில் கொள்ளவேண்டும். ஒரு தோட்டத்தில் விதவிதமான பழ மரங்களையும். பூஞ்செடிகளையும், பூங்கொடிகளையும் தோட்டக்காரன் வளர்க்கிறான். தோட்டத்தில் உள்ள செடிகொடிகள் போன்று பல மதங்களும் இந்த உலகில் தோன்றி வளர்ந்துள்ளன. தோட்டக்காரன் எவ்வித வேறுபாடுமின்றி வளர்ப்பது போன்று படைத்தவனும் (இறைவனும்) எல்லாவிதமான பாங்கு உடையவர்களையும் வளர்க்கிறார் என்று உணர்ந்து அறிந்து நடந்து