பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கொள்வது சமரசம் ஆகும். விஞ்ஞானிகள் இயற்கைத் தத்துவங்களை நடுநிலையோடு ஆராய்வது போன்று பரமார்க்கத்தில் ஈடுபடுகிறவர்கள் பரதத்துவங்களை நடுநிலை வகித்து ஆராய்தல் வேண்டும். அப்பொழுது மக்களது இணக்கத்தில் இனிமையும் மனத்தின் பக்குவத்தில் தெளிவும் ஒருங்கே திகழும். இனி தாயுமானவர் இறையருளால் பாடிய பராபரக்கண்ணிகள் மூன்றினைப் படித்துப் பொருள் உணர்ந்து மகிழ்வது நலம் பயக்கும். பராபரக் கண்ணிகளின் விளக்கம் திருப்பராய்த்துறைத் தவமுனிவர் சித்பவானந்தர் எழுதியதாகும். நன்றியுடன் படித்துப் பயன்பெறவேண்டும். மாயா ஜகம் இலையேல் மற்று எனக்கு ஓர் பற்றும் இல்லை நீயே நான் என்று வந்துநிற்பேன் பராபரமே எது ஓயாமல் உருமாறிக் கொண்டிருக்கிறதோ அது மாயை. எது இடையறாது சலித்துக் கொண்டிருக்கிறதோ அது பிரபஞ்சம் (ஜகத்). ஒரு பொருளை உண்மையானது என்று கருதினால் அதன் மீது பற்று வருகிறது. அது வெறும் தோற்றம் என்று அறியும்போது அதில் பற்று உண்டாவதில்லை. இதற்குச் சான்று ஒன்று எடுத்துக்கொள்வோம். தங்கத்திலும் வெள்ளியிலும் உருவாக்கிய நாணயங்கள் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. மனிதன் அக்குவியலுக்கு மதிப்புத் தருகிறான். முடியுமானால் அதைக் கைப்பற்றவும் எண்ணுகின்றான். இனி இந்த நாணயங்களுக்கு நிகராக இதே தோற்றத்தில் தகரத்தில் அல்லது அட்டையில் செய்து (Token Coin) குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்நாணயங்கள் நன்கு அமைக்கப்பட்டிருக்கின்றன என்று ஒருவன் பாராட்டலாம். ஆனால் அவைகளின் மேல் அவனுக்கு எவ்விதமான பற்றும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அவை வெறும் தோற்றமான நாணயங்கள். உண்மையான தங்கமும் வெள்ளியும் அல்ல. விவேகம் படைத்தவனுக்கு இப்பிரபஞ்சம் தோற்றமான நாணயம் போன்று பொருளற்றதாகிறது. ஆகையால் அதில் அவன் பற்றுக்கொள்வதில்லை. அவன் புரிகிற வேறு ஒரு சாதனம் இருக்கிறது. நீயே அவன் என்றும் பாவனையை அவன் வளர்க்கிறான். அழுக்குப் படிந்த நீரும் தன்னை நீர் என்று சொல்லிக்கொள்வதில் குற்றம் எதுவுமில்லை. ஏனென்றால் அழுக்கைப் போக்கிச் சுத்தப்படுத்திவிடலாம். அதேபாங்கில் சித்தமலம் நீங்கப் பெற்ற சீவன் கடவுளாகிறான். (சிவமாகிறான்). பின்பு சித்தமலத்தோடு கூடியிருக்கும்பொழுது அவன்