பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நான் கடவுள்' (சிவம்) என்னும் எண்ணத்தை வளர்த்துவரும்போது நல்ல ஆத்ம சாதனம் நடைபெறுகிறது. அந்த உருப்பெறுவதற்கு ஏற்ப சித்தமலம் அறுகிறது. சிவபோதம் ஓங்குகிறது. இறைவா, நான் பிரபஞ்ச ஈடுபாட்டை (போதத்தை) ஒழித்து, சிவநாட்டத்தை, கடவுள் நாட்டத்தை வளர்த்து வருவதற்குத் துணை புரியவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றார். 121 தாயுமானவரின் பராபரக்கண்ணி நம் உள்ளங்கொள்ளும்படி மாயை பற்றிக் கூறுகிறது. மால்காட்டிச் சிந்தை மயங்காமல் நின்று சுகக் கால்காட்டி வாங்காதே கண்டாய் பராபரமே (68) இன்பத்தை நாடுவது உயிர்களின் இயல்பு. சிற்றுயிர், பேருயிர் ஆகிய அனைத்தும் இன்பத்தையே தேடி அலைந்து திரிகின்றன. அம்முயற்சியில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கின்றன. சிற்றுயிர்கள் பேருயிர்களாகப் பரிணாமம் அடைவதற்கு இன்பநாட்டம் ஒரு முகாமையாக இருந்து வருகிறது. பெருநிலை அடையப்பெற்ற உயிர்கள் இன்பத்தை எளிதில் பெறுகின்றன. மற்ற உயிர்களை எல்லாம் விட அதிகமாக மனிதன் இன்பத்தைப் பெறுகிறான். ஆனால் அவ்வின்பம் நிலையற்றது என்பதனையும் மனிதனே புரிந்து கொள்ளுகிறான். பிரபஞ்சத்தில் பெறுகிற இன்பங்கள் அனைத்தும் மயக்கத்தின் விளைவாம். ஐந்து இந்திரியங்கள் மூலமாக வருகின்ற இன்பங்கள் யாவும் பின்பு துன்பங்களாக முடிகின்றன. ஐந்து கருவிகளையும் நெறிப்படுத்தி அடங்கிப் பழகுமிடத்து உண்மையான இன்பம் ஆன்மசொரூபத்தில் இருப்பது அறியப்படுகிறது. ஆதலால்தான் சுகத்திற்கு உண்மையான பிறப்பிடம் ஆத்மா என்னும் விவேகம் வருகிறது. அத்தகைய விவேகத்தை உறுதியாகப் பெறுகின்றனர். மீண்டும் இந்திரிய சுகங்களில் மயக்கங்கொள்வதில்லை. விவேகத்தை ஏகதேசம் பெறுகிறவன் சிற்றின்பத்தையும் பேரின்பத்தையும் மாறி மாறி நாடுகிறான். பேரின்பத்திலேயே நான் நிலைத்திருப்பதற்கு அருள் புரிவாயாக என்பது இக்கண்ணியின் கருத்து. பொய்யைப்பொய் என்று அறியும் போதத்துக்கு ஆதரவு உன் மெய் அருளே அன்றோ விளம்பாய் பராபரமே (105) (விளம்பாய் = சொல்வாயாக)