பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13.நிறை வாழ்வு ஆற்றல், அன்பு, அறிவு) மனிதன் வாழ்வின் முக்கியமான குறிக்கோள் வீடுபேறு அடைதலாகும். அதற்கு உற்ற நெறி யோகம். கர்மம், பக்தி, ஞானம் ஆகிய மூன்றும் சாத்திர நூல்களிலும் உயர் இலக்கியங்களிலும் இடம்பெறுகின்றன. இரண்டு சிறகுகளும் ஒரு வாலும் இருந்தால் பறவை பறக்கும். மனிதன் (ஜீவன்) பரத்தை அடைவதற்கு ஞானமும், பக்தியும் சிறகுகளாக அமைகின்றன. கர்ம யோகம் சமன்செய்யும் வால் ஆகிறது. இந்நூலில் கூறப்பட்ட எல்லா வகையான தத்துவங்களும் சாதனங்களும் இம்மூன்றினுள் அடங்கியிருக்கின்றன. பரத்தை எண்ணி, இகவாழ்க்கையை அதாவது இவ்வுலக வாழ்க்கையைப் புறக்கணித்து விடும்படிப் புகட்டும் நூல்கள் இருக்கின்றன. இம்மை வாழ்வே எல்லாம் என்று வலியுறுத்தி மேலான பரத்தைப் புறக்கணிக்கும்படிப் போதிக்கும் நூல்களும் இருக்கின்றன. ஆனால் திருக்குறள், புறநானூறு, அகநானூறு, நாலடியார், ஞானவெட்டியான், வள்ளலார் பாடல்கள் போன்றவை இகம் பரம் இரண்டுக்கும் உரிய இடத்தை முறையாக வகுத்து வழங்குகின்றன. இகமும் பரமும் ஒன்று மற்றொன்றுக்கு முரண்பட்டதன்று என்ற கோட்பாட்டினை வலியுறுத்திப் பேசுகின்றன. இவ்வுலக வாழ்க்கையை நல்ல முறையில் நடத்துபவன் பரத்துக்கு உரியவன் ஆகிறான். பரத்தைச் சார்ந்திருக்க வல்லவன் இகத்துக்கும் நன்கு பயன்படுகிறான். கர்மத்தை (செயலை) இரண்டு விதமாகப் பிரித்து வைத்துப் பார்ப்பவர் உளர். ஒன்றைப் பரமார்த்திகத்துக்கு உரியது என்றும் மற்றதை இவ்வுலக வாழ்க்கைக்கு உரியது என்றும் அவர்கள் கருதுகின்றனர். அவ்விரண்டு பிரிவுகளுக்கும் உரியவைகளை முறையே வைதீகக் கர்மம், உலகியல் கர்மம், ஆத்மசாதனம், உலகவியவகாரம், அருள்நாட்டம், பொருள் நாட்டம், இன்ப நாட்டம் என இப்படியெல்லாம் கூறுகின்றனர். ஆனால்