பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீணே துன்பப்படுவதுதான் கண்ட பலன். இந்த உடல் இருக்கும் வரையில் சரியான ஞானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ்ந்திருப்பது முறை. உடல் அழிகின்ற வேளையில் அதற்கு அந்த அழிவிற்கு உடந்தையாய் இருப்பது முறை. இப்படி நடந்து கொள்வது சான்றோர் கடன்; உடம்பின் பயன் கொண்டார் செயல். கரும்பாட்டி கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேம்கால் துயராண்டுழலார் வருந்தி உடம்பின் பயன் கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவ திலார் (நாலடியார் 36) 133 நன்கு விளைந்து முற்றிய கரும்பை ஆலையில் கொடுத்துப் பிழிந்த பின் எஞ்சியிருக்கும் சக்கையைத் தீயிடுவர். அதற்காக யாரும் வருந்தமாட்டார்கள். வாழும் காலத்தே நல்லநெறிகளைக் கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் வாழ்வின் பயன் கொண்டவர்கள் கூற்றம் வரும்போது அஞ்சமாட்டார். உடம்பு அழியப் போகிறதே என்று வருத்தப்படமாட்டார். வாழ்ந்து முடிந்த உடம்பு சக்கைதானே. சக்கை சாம்பலானால் என்ன? மண்ணில் புதைந்து மக்கிப் போனால் என்ன? சாறுபிழிந்தபின் எறிந்த சக்கைக்கு யாரும் வருத்தப்படமாட்டார்கள். அதுபோல் நல்லவிதமாக வாழ்ந்தவர்கள் மரணம் கண்டு, உடல் அழிவதைக்கண்டு துயரமடையமாட்டார்கள். மரண பயமற்றவர் நிறைவாழ்வு வாழ்ந்தவர் ஆவார். நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது குறள் 235)