பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அறிவு மூன்றாவது படியாகும். பட்டப்பகலைத் தோற்றுவிக்கும் சூரியன் போன்றது அறிவு. அனைத்தையும் அறிவு விளக்கவல்லதாகும். மாண்புகளை எல்லாம் எடுத்துக்காட்ட வல்லது. உயிர்கள் செயல்புரிய வைப்பது அறிவு. அதை மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடனும் வளர்ப்பது மனிதனின் கடமையாகும். ஆக ஆற்றலையும் அன்பையும் அறிவையும் ஒருங்கே அடையப் பெற்றிருப்பனுக்கு மேலும் பெறவேண்டிய பேறு ஏதுமில்லை. அவன் நிறைமனிதன் ஆகிறான். அவனுக்கே நிறைநிலை வாய்க்கிறது. நிறைநிலை எய்திய மனிதன், நிறை நிலை எய்த விரும்பும் மனிதர் யாவருக்கும் நற்றமிழ் நூல்கள் உற்றதுணையாக விளங்கும். நந்தமிழ் நூல்கள் கூறும் நல்ல தத்துவங்களை உணர்ந்து போற்றி வாழ்பவன் வையத்துள் வாழ்வாங்கு வாழும் மனிதன் ஆவான். அவன் வானுறையும் தெய்வத்துக்கு இணையாக மதிக்கப்படுவான். போற்றப்படுவான். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் குறள் 50) நிறைவாழ்வில் மரணம் நித்திரை அல்லது கனவற்ற உறக்கம் மரணத்துக்கு நிகரானது. அயர்ந்து உறங்குகின்ற ஒருவன் அவன் சரீரத்தில் ஞாபகம் பெறுவானாகில் அந்த உறக்கத்துக்கு நித்திரை என்று பெயர். அதே சரீரத்தில் ஞாபகம் பெறாது வேறு ஒரு சரீரம் எடுக்க அந்த உயிர் போய்விடுமேயானால் பழைய சரீரத்துக்கு மரணம் என்னும் பெயர் வருகிறது. இதை நன்கு எண்ணிப் பார்க்க வேண்டும். மனிதன் உறக்கத்தைக் குறித்து எப்படிப் பயப்படுவதில்லையோ அப்படி மரணத்தைக் குறித்தும் பயப்படுதல் கூடாது. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் அப்படி இருப்பதில்லை. எடுத்த உடல் ஒன்றுக்கு மரணம் வருவது ஒரே ஒரு தடவை. ஆனால் அதன் அழிவைக் குறித்து மனிதன் எத்தனை எத்தனையோ தடவை துயரப்பட்டுக்கொண்டு இருக்கிறான். சுடர் விளக்குப் போன்றது ஞானத் தெளிவுடன் மனிதன் வாழ்ந்து வருதல் வேண்டும். மனிதனின் உடலுக்கு நோய் நொடி ஏற்படும்பொழுது உடல் அழியுமே என்று துன்புறுவதாலோ விம்மி அழுவதாலோ அதன் அழிவையோ தேய்வையோ தடுத்துவிடமுடியாது.