பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 போன்றவர்தான் எனினும் அவர் ஆழ்ந்து சிந்திப்பவர். மிகவும் பிடிவாதம் உள்ளவர். மலை அசையினும் தான் அசையா உறுதிப்பாடுடையவர். கூற்று தத்துவஞானி வில்லியம் ஜேம்ஸ் அவர்களின் இவ்விளக்கத்திற்கு அரணாக அமைகிறது. "காணவியலாத பிடிவாதத்துடன் நிலையாக, சலனப்படாமல் எதைப்பற்றியும் விருப்பு வெறுப்பின்றி ஆழமாக அடித்தளம் வரை சென்று சிந்திக்க முயலும் பண்புடையவர் தத்துவஞானி" என்று உரைக்கின்றார். கீழை நாட்டறிஞர்களும் அதை ஏற்றுக் கொள்கின்றனர். மெய்ப்பொருள் நாட்டத்தில் அதாவது தத்துவ நாட்டத்தில் கண்ணும் கருத்துமாயிருப்பவர் சாதி, இனம், மொழி, சமயம் ஆகிய எவற்றிலும் சிக்கிக் கொள்ளமாட்டார் என்பது வெள்ளிடைமலை. காலங்காலமாக நின்று நிலவிவரும் அடிநிலை உண்மையை (நின்ற உண்மையை) எந்த ஒரு மனிதனாலும் மாற்றி அமைக்கவோ திரிவுப்படுத்தவோ இயலாது. கடலளவு கற்றவர் எனினும், மலையளவு உயர்ந்தவர் எனினும் நிலம், நீர், தீ, வளி, வான் என்று அமைந்து கிடக்கின்ற இயற்கைக் கூறுகளை வயப்படுத்தியவர் எனினும், இன்னும் பிறவாற்றான் திறம் உடையவர் எனினும் நின்ற உண்மையை அழித்து எழுதவோ, மறித்துப் பகரவோ முடியாது என்பதை யாவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்தியாவில் காலங்காலமாகப் பயின்று வரும் தத்துவங்கள் 96 என்பர். கூட்டியும் குறைத்தும் கூறுபவர் உண்டு. 96 தத்துவங்கள், 1. 2. 3. 4. 5. பஞ்சபூதங்கள் (5) நிலம், நீர், தீ, வளி, வான் கர்மேந்திரியங்கள் (5) மொழி, கை, கால், எருவாய், கருவாய் ஞானேந்திரியங்கள் (5) மெய், வாய், கண், மூக்கு, செவி தன்மாத்திரைகள் (5) சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் அந்தக்கரணங்கள் (4) மனம், புத்தி, சித்தம், அகங்காரம்