பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்து, வீரத்தையும் பொருள்தேடும் முயற்சியையும், அரசியல் நடத்தும் முறையினையும், வள்ளல் தன்மையையும் புறத்தில் வைத்துத் தமிழ் மக்களின் ஒப்புயர்வற்ற வாழ்க்கை முறையினைத் தமிழ்நூல்கள் கவின்மிகு சொல்லோவியமாகத் தீட்டியுள்ளன. சிலம்பில் பறல்போல், பாலில் படுநெய்போல் தமிழ் நூல்களில் தத்துவங்கள் படிந்திருக்கின்றன. பாவும் ஊடையும் போல் தமிழும் தத்துவமும் உடனாய் நின்று பயன்தருகின்றன. பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கத் தமிழ் நூல்களாகும். சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவைகள் ஐம்பெருங்காப்பியங்கள். வையம் புகழும் வள்ளுவர் பெருமான் எழுதிய குறள் தவிர்த்த பிற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் காப்பிய காலத்திற்குப் பின் தோன்றியவைகளாகும். திருவள்ளுவர், ஏசுநாதர் பிறப்பதற்குச் சில ஆண்டுகள் முன்னர்த் தோன்றியவராவர். தமிழ் இலக்கியங்களை நன்கு புரிந்து கொள்ள உதவும் ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியமும் சங்கத்தமிழ் இலக்கண நூலாகும். இலக்கணமும் இலக்கியமும் அடையாளங்காட்டும் ஆசானாகவும் விளங்கும் ஒரு நூல் தொல்காப்பியம் எனின் மிகையன்று. 17 'பத்துப்பாட்டு' எனப்படும் தொகுதியில் அடங்கும் ஒவ்வொரு நூலும் ஒரே பாட்டினால் இயன்றவை. ஒரு பாடலே ஒரு நூலாகும். அவை, 1. திருமுருகாற்றுப்படை 2. பொருநராற்றுப்படை 3. பெரும்பாணாற்றுப்படை 4. சிறுபாணாற்றுப்படை 5. முல்லைப்பாட்டு 6. குறிஞ்சிப்பாட்டு 7. மதுரைக் காஞ்சி நெடுநெல்வாடை பட்டினப்பாலை மலைபடுகடாம் 8. 9. 10. என்பனவாம்.