பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 தமிழ் நூல்கள் மிகவும் தெளிவாகக் கூறுகின்றன. பிரபஞ்சத் தத்துவம் ஓர் அடிப்படையான தத்துவம். அதிலிருந்துதான் பிற தத்துவங்கள் தோன்றின. பிரபஞ்சத்தின் ஆணிவேர் சூரியன். சூரியன்தான் பிற கடவுள் தத்துவங்கட்கு வழிவகுத்தவன். நாம் வணங்கும் கடவுளர் அனைவரும் சூரிய தத்துவத்திலிருந்து வருவிக்கப்பட்டவர்களே. 'அவன் அன்றி ஓரணுவும் அசையாது' என்ற நூற்பாவின் சூத்திரத்தில் 'அவன்' என்பது சூரியனே. சூரியனே ஞாயிறு. தமிழ், இப்பிரபஞ்சத்தின் ஆணிவேர் தத்துவமான ஞாயிற்றைப் போற்றும் விதம் எண்ணி எண்ணி வியக்கத்தக்கதாகும். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம். இது ஒரு மக்கள் காவியம். ஒரு நாட்டுக் குடிமகனையும் குடிமகளையும் கதை மாந்தர்களாகக் கொண்டு புனையப் பட்ட வரலாற்றுண்மை நிறைந்த அழகான காப்பியமாகும். இதனை இயற்றியவர் துறவு நெறியில் ஊன்றித் திளைத்து வாழ்ந்த இளங்கோவடிகள். பெருங்காவியங்களையும். இதிகாசங்களையும். நெடுங்கதைகளான இயற்கையிறந்த கற்பனைகள் நிறைந்த புராணங்களையும் எழுதுவோர் கடவுள் வாழ்த்துப் பாடுவதே மரபு. தாம் எழுத விரும்பிய காவியமோ கதையோ இனிதே முடிய வேண்டும் என்று வேண்டித் தத்தம் கடவுள்களையே முதற்கண்பாடுவர். அதுவே காப்பு யாப்பு அல்லது காப்புச் செய்யுளாக, காப்பியத்தின் தோற்றுவாயாக அமையும். ஆயினும் இளங்கோ அடிகள் எந்தக் கடவுளையும் தன் காப்பியத்திற்குக் காப்பாகப் பாடிப் போற்றவில்லை. தொண்ணூற்றாறு தத்துவத்திற்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கி உலகம் விளக்கி வரும் ஞாயிற்றையே முதற்கண் பாடினார். இப்புதுமையைக் கடவுள் மறுப்பாகக் கருதாமல் பிரபஞ்சத்தின் முதல் தத்துவத்தைப் போற்றியதாகவே தமிழ் உலகம் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு பாராட்டியது. இதோ பாடல். திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெண்குடை போன்று இவ் அம்கண் உலகுஅளித்த லான். ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும் ! காவிரி நாடன் திகரிபோல் பொன் கோட்டு மேருவலந் திரித் ன்.