பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 O இந்திய நாட்டு ஆன்மீக உலகம் மேலைநாட்டு ஆன்மீகத்தோடு ஒப்பிடும்போது மிகவும் பண்பட்டதாகவே விளங்கி வந்துள்ளது. அறிவு வளர்ச்சியை நம்நாட்டு ஆன்மீகம் தடை செய்யவில்லை. சமயங்கள் தங்களிடையே பூசலிட்டுக் கொண்டன. போட்டி, பொறாமையில் ஈடுபட்டுப் பகைமையை வளர்த்துள்ளன. ஒரு சமயத்தைத் தழுவியவருள்ளும் பேரழிவுகளும் ஏற்பட்டுள்ளன. சமயப் போர்களும் பூசல்களும் வரலாற்றுண்மைகளாகும். இந்தியாவிலும் சமயப்பூசல்கள் இன்றும் நிகழ்கின்றன என்பது வருந்தத்தக்கதாகும். எனினும் அறிவியல் உலகத்தோடு இந்திய ஆன்மீக உலகம் மோதிக்கொள்ளவில்லை. தொடக்கக்கால இந்திய மருத்துவம் ஆன்மீகம் தந்த கொடையாகும். சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம் இன்னும் பல்வேறு மேலை நாட்டு மக்களிடையே (Tribal community) பழக்கத்தில் இருந்து வரும் மருத்துவ முறைகள் எனப்பலவும் இந்திய ஆன்மீக உலகத்தின் சாதனையே ஆகும். இம்மருத்துவ முறைகள் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து இன்றளவும் பயன்பட்டு வருகின்றன. சிலசில வேறுபாடுகள் இருப்பினும் ஆன்மீக உலகம், மேலை நாடாயினும் கீழை நாடாயினும் இவ்வண்டங்களும் பகிரண்டங்களும் இறைவனால் படைக்கப்பட்டன. இறைவனால் இயற்றப்பட்டு இயக்கப்படுகின்றன. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை ஆணித்தரமாக நம்புகின்றன. உலகத்தோற்றம் இறைவனது அருளாற்றலால் விளைந்தது என்பதே இறையியலாளரின் துணிவு. ஆன்மீக உலகம் தான் கண்டறிந்த அளவில் உலகத் தோற்றம் பற்றிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளட்டும். அறிவியல் உலகம் தான் அறியும் உண்மைகளைக் கூறட்டும். அண்டங்களும் பகிரண்டங்களும் இவர்கள் என்ன உணர்ந்தார்கள், அறிந்தார்கள், கூறுகிறார்கள், என்பது பற்றியெல்லாம் எள்ளளவும் கவலைப்படுவதுமில்லை, வருந்துவதுமில்லை. அண்டங்களும் பேரண்டங்களும் தத்தம் கதியில் சென்று கொண்டிருக்கின்றன என்பதே நின்ற உண்மையாகும். நாம் உணரவேண்டிய பெரிய தத்துவமாகும். மனிதனும் எண்ணிலாத பிற உயிர்களும் வாழ்கின்ற பிரபஞ்சம் என்று கூறப்படுகின்ற உலகம் எதனால் ஆக்கப்பட்டது என்பதை அறிவது நல்லது. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டுவது தேவையற்றது. உயிர்கள் வாழ்கின்ற இவ்வுலகம் எதனால் ஆனது என்பதைத்