பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 வருகின்றனர். இயற்கையின் உண்மைகளை அறிவதே அவர்கள் நோக்கம். யாரையும் எதையும் சார்ந்தது அல்ல அறிவியல் உண்மை. நடுவு நிலையாக இருந்து ஆராய்ந்து உரைத்த கருத்துக்கள் மற்றும் விளக்கங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அறிவியல் அறிஞர்களிடையே முரண்பாடுகள் இருக்கின்றன. இம்முரண்பாடுகள் பகையை வளர்க்காமல் மேன்மேலும் ஆராய வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன. முரண்பாடுகளையும் ஐயங்களையும் அடிப்பூடையாகக் கொண்டு வளர்வதுதான் அறிவியல். " அன்றிலிருந்து இன்றுவரையிலும் ஆன்மீக உலகம் தங்களிடையே நிலவிவரும் வெறும் நம்பிக்கையினை ஆதாரமாகக் கொண்டு ஏற்றுக்கொண்ட கருத்துக்களைக் காலத்திற்கேற்பத் திருத்தி அமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. தயக்கமே காட்டி வருகின்றது. தத்தம் நம்பிக்கைகளைத் தகர்த்தெறியும் சில உண்மைகள், கருத்துகள், விளக்கங்கள் வெளியிடப்படும்போது சினம் அடைவது ஆன்மீக உலகின் தொன்றுதொட்ட இயல்பாக உள்ளது. உயிரியல் அறிவியல் அறிஞர் டார்வின் உயிர்களின் தோற்றம் பற்றி வகுத்துரைத்த பரிணாமக் கொள்கையைக் கண்டு மேலைநாட்டு ஆன்மீக உலகம் ஆட்டம் கண்டது. தங்கள் தலைமை பறிபோய்விடுமோ என்று அஞ்சியது. ஆட்சியாளரின் துணைகொண்டு அவரை வாட்டி வதைத்தது. மேலை நாட்டு ஆன்மீக உலகம் மக்களின் அறிவு வளர்வதில் ஆர்வமில்லாமல் அறிவே கடவுள் என்பதை ஏற்காமல் தங்களது ஆதிக்கம் சிதைந்து விடுமே என்ற அச்சத்தினால் அறிவியலாரின் கண்டுபிடிப்புக்களை ஏற்க மறுத்தது. பூமி தான் கதிரவனைச் சுற்றி வருகின்றது. கதிரவன் பூமியைச் சுற்றி வரவில்லை என்ற உண்மையைப் புலப்படுத்தியதற்காகக் கலிலீயோ போன்ற பேரறிஞர்கள் 'பைத்தியக்காரன்' என்று ஏசப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டுப் பல சொல்ல முடியாத கொடுமைக்கு ஆளாக்கினர். எனினும் அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் பற்றி வருந்தவில்லை. வேதனைப்படவில்லை. எதையும் அறிவினால் ஆராய்ந்து ஏற்றுக்கொள் என்று கூறினார் சாக்ரடீசு. 'உன்னையே நீ அறிவாய்' என்று கூறிய வாயில் நஞ்சு ஊற்றப்பட்டது. அறிவில் நாட்டங்கொள்ளாத ஆன்மீகம் முட்டாள்தனமானது என்று பழுத்த ஆன்மீகரான தமிழ்த் தென்றல் திரு.விக. அவர்கள் துணிச்சலாகக் கூறினார். ஆன்மீகம் இல்லாத கலவாத அறிவு முரட்டுத்தனம் என்றும் கூறினார். எண்ணிப் பார்க்க வேண்டிய கருத்துகள்.