பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. உலகத் தோற்றம் நாம் வாழ்ந்து வருகின்ற இந்நில உலகமும், அதற்கு அணியாய் ஆதரவாய் விளங்குகின்ற ஞாயிறு, திங்கள் (சந்திரன்) போன்றவற்றோடு பிறகோள்களும் வானில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றிற்கு மையமாக நின்று கொண்டே இருப்பது சூரியன். சூரியனை ஆதித்தன் என்றும் கூறுவர். ஞாயிறு என்பதும் சூரியனைக் குறிக்கும் சொல்லே. சூரியனை மையமாகக் கொண்டு பல்வேறு கதியில் இயங்கிக்கொண்டிருக்கும் கோள்களும், சூரியனும் சேர்ந்து 'ஞாயிற்று மண்டலம்' அல்லது சூரியமண்டலம் என்று அழைக்கப்படும். இந்த மண்டலமே நாம் வாழும் அண்டம். நம்முடைய சூரியமண்டலம் போல் பலநூறு மண்டலங்கள் இயங்குகின்றன. அவற்றை நாம் பகிர் அண்டங்கள் என்று கூறுகிறோம். 'பகிர' 'என்றால் வெளியே தள்ளி உள்ளது என்று பொருள். 'அண்ட பகிரண்டங்கள்' என்பது யாவரும் அறிந்த தொடர். அண்டங்களும் பகிரண்டங்களும் எவ்வாறு தோற்றத்திற்கு வந்தன? தோற்றத்திற்கு வருமுன் எந்தத் தாயின் கருப்பத்தில் ஒடுங்கி இருந்தன? இவையாவும் தோன்றியது ஏன்? யாருடைய வாழ்வையும் வளர்ச்சியையும் முன்னிட்டு இவ்வண்ட பகிரண்டங்கள் தோன்றின? இவ்வாறு ஆயிரமாயிரம் வினாக்கள் பலதரப்பட்ட மக்கள் மனதில் தோன்றியுள்ளன. வானியல் அறிஞர்களும், ஆன்மீக உலகினரும் இதுநாள் வரையிலும் அவரவர் அறிந்தவாறே. உணர்ந்தவாறே. நம்பியவாறே விளக்கம் அளித்துள்ளனர். இவ்விளக்கங்கள், விடைகள் அனைத்தையும் இரண்டு தொகுப்பில் அடக்கலாம். அறிவியல் அடிப்படையிலான சுதந்திரமான ஆராய்ச்சியின் விளைவாகத் தோன்றியவை ஒரு தொகுதியுள் அடங்கும். கடவுள் பற்றினால் கடவுளின் ஆற்றல் மீது கொண்ட அவாவினால் கூறப்பட்ட விளக்கங்கள் இரண்டாவது தொகுதியுள் அடங்கும். அறிவியல் அறிஞர்கள் பல்வேறு கருதுகோள்களை (Hypothesis) முன்னிறுத்தியும் தங்களிடமுள்ள அறிவியற் கருவிகளைத் துணையாகக் கொண்டும் இன்று வரையிலும் ஓயாது ஒழியாது துருவித் துருவி ஆராய்ந்து