பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபந்தமும் தெய்வத் தமிழேயாம். வைணவத் தமிழிலும் மணி மணியான தத்துவங்கள் பொதிந்துள்ளன. அவ்வையார் வழங்கிய ஆத்திசூடி தத்துவ வாய்பாடு ஆகும் எனின் மிகையன்று. நூற்றாண்டுதோறும், அடுத்தடுத்து அறமும் தத்துவமும் உரைத்தவர் எண்ணிலர். பட்டினத்தார். பதினெண்சித்தர்கள், இராமலிங்க அடிகளார் ஆகியோரின் பாடல்களில் அகிலம் தழுவிய தத்துவங்கள் விளங்கக் காணலாம். பாரதியார், பாரதிதாசன் போன்ற இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்கள் பாடல்களில் மனிதகுல மேன்மையை முன்னிட்டுக் கூறிய செழுமையான செம்மையான தத்துவச் செய்திகள் நிறைய இருக்கின்றன. தமிழில் தத்துவம் கூறும் பலவகையான இலக்கிய வடிவங்களில் நூல்கள் ஆண்டுதோறும் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. காலத்திற்கேற்றவாறு தத்துவ உருமாற்றங்களும் நடைபெற்று வருகின்றன. நற்றமிழ் வல்லார் எழுதும் நூல்களைப் படித்து அமைதியாக எண்ணிப்பார்த்து அன்றன்றே தணிக்கை செய்பவர்கள் நெஞ்சில் தத்துவம் நடம்புரியும். பாரதியார் பாடிய தோத்திரப் பாடல் ஒன்றுடன் இப்பகுதியை நிறைவு செய்யலாம். பக்தியினாலே - இந்தப் பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடீ சித்தந் தெளியும் - இங்குச் செய்கை அனைத்திலும் செம்மை பிறந்திடும் வித்தைகள் சேரும் நல்ல வீரர் உறவு கிடைக்கும் மனத்திடைத் 19 தத்துவ முண்டாகும் - நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்.