பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 இயற்கையோடு வைத்துள்ள தெய்வீக இணக்கமே இயற்கையோடு இயற்கையாகவும் இயற்கைக்கு அப்பாலும் உள்ளதை அறியும் ஞானக் காட்சிக்குத் துணைபுரிகிறது. இயற்கையினால் அருளப்பட்ட சிறந்த சமய ஒழுக்கம் சடங்குகளைத் தாண்டியது. அறிவு வாயில்களான மெய், வாய், கண், மூக்கு, செவி போன்ற பண்பட்ட இந்திரியங்களும் தெளிந்த மனமும் பிறகு ஞானக் கண்ணாக மாறிவிடுகின்றன. மேலோட்டமாக நினைத்தால் ஞானக் கண்கொண்டு பார்க்கின்ற பொருள் வேறு, ஐம்புலன்களால் அறியப்படும் பொருள் வேறு என்பதுபோல் தோற்றமளிக்கும். உண்மை அதுவன்று. ஒரே பொருள் ஐம்புலன்களுக்குப் புலனாகும்போது இயற்கை என்னும் பெயர் பெறுகிறது. வாலறிவால், அதாவது ஞானக்கண்ணால் ஊடுருவிப் பார்க்கும்பொழுது தெய்வம் என்னும் பெயர் பெறுகிறது. மிக உயர்ந்த இயற்கைப்பொருள் என்று பார்த்தாலும் வாலறிவால் உணர்ந்தாலும் தெய்வம் என நினைத்துப் போற்றினும் சூரியன் அதற்குத் தகுதி உடையவனே. இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. மனிதனோடு தொடர்புடைய பிரபஞ்சப் பொருட்களின் தலைவன் சூரியனே. தத்துவங்களில் உயர்ந்தது சூரிய தத்துவமே. சூரியனைச் சூரியநாராயணன் என்று போற்றி வழிபடும் மரபு இருக்கிறது. பாரதியார், சுருதியின் கண்முனிவரும் பின்னே தூமொழிப் புலவோர் தாமும் பெரிது நின்றன் பெருமை என்றேத்தும் பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன் பிரதியே. பொருள் யாவிற்கும் முதலே பானுவே. பொன்செய் பேரொளித் திறனே கருதி நின்னை வணங்கிட வந்தேன் கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே என்ற பாட்டில் பரிதியின் எழிற் கோலங்களைப் பார்த்து மகிழ்ந்ததோடு 'பொருள் யாவிற்கும் முதலே' என்று சூரியனின் முதன்மையையும் போற்றுகிறார். நந்தமிழ் நாட்டு மக்கள் சமயச் சடங்குகளில் பொருளும் பொழுதும் செலவிடாமல் 'இயற்கையோடிசைந்த இன்பம் இன்பத்தோடிசைந்த வாழ்வு'