பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கற்றலும் நிகழ்ந்தது. கற்றலும் தொழிலும் ஒன்றை ஒன்று வளர்த்தன. கல்வியும் தொழிலும் வளர்ந்ததால் வசதிகள் மேல் நாட்டம் ஏற்பட்டது. பொருள் தேடும் முயற்சி பெரிதானது. பொருள் தன்னை வந்து சேரச் சேர இன்பநாட்டமும் கூடிக்கொண்டே போயிற்று. எல்லையில்லாத இன்பத்தில் திளைத்ததால், துன்பத்தில் முடிகிற அனுபவம் ஏற்பட்டது. இதுநாள் வரையிலும் தான் அனுபவித்து வந்தது ஓரளவிற்கு உட்பட்ட இன்பமே எனவும் அவ்வின்பத்தால் பெரும்பயன் விளையாது என்றும் உணரத் தலைப்பட்டான். எனவே பேரின்ப நாட்டம் ஏற்பட்டது. அவனையும் அறியாமல் தத்துவ ஆராய்ச்சியும் வளர்ந்தது. மனிதவாழ்வு பற்றிய எல்லாத் தத்துவங்களும் உடலை அடிப்படையாக வைத்தே செயல்படுகின்றன. உடம்பை வைத்துக்கொண்டுதான் வாழ்க்கை என்னும் ஒலியத்தை வரையவேண்டும். கண்டோர் கண்களையும். கருத்தையும் கவரும் வண்ணம் வாழ்க்கை ஓவியம் கவின் பெற வேண்டுமெனில் உடல் நலம் பேண வேண்டும். உடல்நலம் பேண உடல் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். உடற்கூறு பற்றிய அறிவு வேண்டும். உடற்கூறு பற்றிய அறிவு இல்லாமல், உடலைப் பராமரித்தல் இயலாது. உடற்கூறு பற்றியும் உள்நடக்கும் வினைகள் பற்றியும் அறிவது மிகுந்த நன்மையைத் ரும். மனித உடலை எண்சாண் குடில் என்பார்கள். "எட்டடிக் கூட்டுக்குள்ளே, முருகா இன்னும் எத்தனைநாள் இருப்பேன்?" என்று வினவுகிறார் முருகனடியார் ஒருவர். 'எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்' என்ற கூற்றிலும் 'எட்டு' அளவே கூறப்பட்டுள்ளது. கூடு என்றாலும் கட்டடம் என்றாலும் ஒன்றுதான். 'தோல் துருத்தி' என்றார் ஒரு சங்கப்புலவர். வையம் தழைத்து மாண்புற வழிகாட்டி அறம், பொருள், இன்பம் வகுத்துரைத்துச் செம்பொருள் தந்த திருவள்ளுவர் 'என்புதோல் போர்த்த உடம்பு என்று கூறுகிறார். ஒரு கட்டடம் போல்தான் உடம்பும் அமைந்துள்ளது. ஒரு கட்டடத்தின் அடிப்படைப் பொருள் கல்லும், செங்கல்லும், சிமெண்டும். மேற்பூச்சுகளும் ஆகும். இவற்றினும் அடிப்படையானது செங்கல்லும் சிமெண்டுமே. மேற்பூச்சுகள் தேவைக்கு ஏற்பவே அமையும். செங்கல்லும் சிமெண்டும் இன்றிக் கட்டடம் எழும்பாது. கட்டடத்திற்கு எவ்வாறு செங்கல் அடிப்படை உறுப்போ அதுபோல் எல்லா உயிரினங்களின் உடம்பு