பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களில் மனிதனே ஆறறிவுபடைத்ததின் மூலம் மனம் என்பதைக் கொண்டிருக்கிறான். மனிதனிடத்திலேதான் ஆன்மாவும் உள்ளதாகச் சில தத்துவநூல்கள் கூறுகின்றன. அறிவியலுக்கு முடிவு இல்லை என்பதுபோல் தத்துவக் கருத்துகளுக்கும் முடிவு இல்லை. ரு அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றையொன்று தொடாமல் பயணிக்கின்றன. நேர்கோடுகளாக பௌத்தமும் சைனமும் ஆன்மிகத்தின் அடிநிலையில் அறிவியலை முதன்மைப்படுத்துகின்றன. இந்தியத் தத்துவ நூல்களில் தமிழில் அமையும் தத்துவநூல்கள் கணிசமாக உள்ளன. இத்தத்துவ நூல்களில் மேற்குறிப்பிட்ட உலகு, உயிர், மனம், ஆன்மா, பிராணன், வினை, கருமம், பயன், ஊழ் போன்றவை பரவலாகப் பேசப்பட்டுள்ளன. அறிவியல் தத்துவங்கள் அறிவு, உழைப்பு போன்றவற்றை முதன்மைப்படுத்துகின்றன. அறிவியல் ஆன்மிகம் இவற்றைக் கூறித் தமிழில் தத்துவநூல்கள் எனும் தலைப்பில் சொற்பொழிவு நூலாக முனைவர் நா.பாஸ்கரன் அவர்கள் அமைத்துள்ளார். பல்வேறு தலைப்புகளில் எளிமையாகவும் எடுத்துக் காட்டுகளுடனும் படிப்போரை வயப்படுத்துமுகமாகவும் இந்நூலை எழுதியுள்ளது பாராட்டுக்குரியது. இச்சொற்பொழிவன்றே து அச்சிட்டு நூலாக வெளிப்படுவதும் சிறப்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்களால் தோற்றுவிக்கப் பெற்றுள்ள இந்த அறக்கட்டளையின் 11ஆவது பொழிவாக இந்நூல் அமைகிறது. இவ் அரியபெரிய அறக்கட்டளையை நிறுவிய பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களைப் பாராட்டுகிறேன். இந்நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவதோடு தம் தனிப்பட்ட அக்கறையையும் காட்டிவரும்