பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூச்சைப் பொறுத்தது. உயிர்ச்சக்தியும் நல்வாழ்வும் நீண்ட உள்மூச்சு, வெளி மூச்சு இவற்றிலேயே அடங்கியுள்ளன. பிராணன் பற்றியும், பிராணாயாமத்தின் பயன் பற்றியும் திருமூலர் கருத்து இரண்டொன்றினை அறிவது நன்று. ஐம்பொறிகளுக்கு நாயகன் அவ்வூர் தலைமகன் உய்யக் கொண்டேறும் குதிரை மற்று ஒன்றுண்டு மெய்யார்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய் பொய்யாரைத் துள்ளி விழுந்திடும் தானே 47 ஐம்பொறிகளுக்குத் தலைவனும், அவ்வுடம்புக்கு நாயகனும் ஆகிய ஆன்மா உய்திபெற்று மேல் செல்லுவதற்கு மனத்தோடு பிராணனாகிய குதிரை ஒன்றுள்ளது. அது தேகத்தை விட்டு அகண்டத்தைப் பற்றி நின்றோர்க்கு வசப்பட்டு மேன்மைகள் செய்யும். மெய் உணர்வில்லாது உலகியல் பொருள்களில் மட்டுமே நாட்டமுடையாருக்கு வசப்படாமல் சவாரி செய்பவரைத் தள்ளிவிடும் குதிரையைப் போல் பயன்படாது. புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால் கள்ளுண்ண வேண்டாம் தானே களிதரும் துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே பறவையை விட வேகத்துடன் கூடிய பிராணனின் வழி சிரசை நோக்கிச் சென்றால் கள்ளுண்ணாமலேயே மகிழ்ச்சியுண்டாகும். களி மயக்குண்டாகும். உடலில் சோர்வு நீங்கும். சுறுசுறுப்புடனும் இருக்கும். பிராணனும் மனமும் சிரசில் பாயும் மனம் உடையவர்க்கே இவ்வுண்மையைச் சொன்னோம். ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார் இல்லை காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக் கூற்றை உதைக்கும் குறியது தானே 'காற்றைப் பிடிக்கும் கணக்கு' என்பது பிராணாயாமத்தில் உள்மூச்சு, வெளி மூச்சு ஆகியவற்றின் கால அளவு பற்றியது. பிராணாயாமப் பயிற்சியைத் தெரிந்தவர் காலனைக் கடக்கும் இலட்சியத்தில் குறியாய் இருப்பார். காலனை வெல்லவும் கூடும் ஆயுளை வேண்டியவாறு நீட்டித்தல் முடியும்.