பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 தொடு உணர்ச்சிக்கு மட்டுமே உடைய ஓரறிவு உயிர், அதனால் கிடைக்கும் இன்பத்தை நாடும். புல்லும் மரமும் தொடு உணர்ச்சியால் உண்டாவதை அறியும். நண்டு, நத்தை போன்றவை தொடுஉணர்ச்சி உண்ணுதல் ஆகிய இரண்டும் அறிவால் அறியும் இன்பம் பெறும். எறும்பு சிதல் போன்ற உயிரினங்கள் மெய்யால் தொட்டும், வாயால் உண்டும். மூக்கால் முகர்ந்தும் சிறிய அளவு இன்பம் அடையத்தக்கன. தும்பி, நண்டு. போன்றவை மெய்யால் உற்றும், வாயால் சுவைத்தும், மூக்கால் முகர்ந்தும், கண்களால் பார்த்தும் அறிந்து இன்பம் பெறும் நான்கு அறிவுடைய உயிரிகளாகும். நீரிலும் நிலத்திலும் விண்ணிலும் வாழும் முதலை. ஆடு,மாடு, பறவைகள் போன்றவை செவியால் கேட்கும் திறன் உடையவைகளாகும். இவை உடலால் பொருந்தியும் மருவியும். வாயால் சுவைத்தும் உண்டும் மூக்கால் முகர்ந்தும், கண்ணால் நோக்கியும் காதால் கேட்டும் ஐம்பொறி இன்பம், அதாவது ஐந்தறிவு இன்பம் அனுபவிப்பன ஆகும். இந்தப் படித்தரத்தில் உச்சியில் இருப்பது மனித உயிரினம். படைப்பின் சிகரமாக இருப்பவன் மனிதன். ஐம்பொறிகளோடு மனம் படைத்து. அதனால் ஆறறிவு உயிர் என்று அறியப்பட்டவன். 'சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தின் வகை தெரிந்து வாழ உதவும் மனம் பெற்றவன் மனிதன். எனவே பிற உயிர்கள் அடையும் இன்பத்தை விட மேலான இன்பத்தை மனிதன் அடைகிறான். எல்லா உயிர் வகைகளும் துன்பம் விலக்கி இன்பம் அடைதலையே விரும்புகின்றன. ஆனால் உயிரினங்களின் முதல் அனுபவமே துன்பம் ஆகும். துன்பம் இன்பமாகிறது. பிறந்த உடனே பசித்துன்பம் ஏற்படுகிறது. பிறந்த கன்று சிறிதுநேரத்தில் தாய்மடியைத் தேடிப்பால் குடிக்கிறது. மனிதக் குழந்தையும் பிறந்த உடனே அழுகிறது. சர்க்கரை நீரோ, தேனோ வாயில் தடவுவது இன்றும் வழக்கமாக இருக்கிறது. 'தாய்மடி தேடுதல்' முதன்முதல் ஏற்படும் துன்பத்தால் - பசியால் நடைபெறுகிறது. ஆகவே உயிர்களுக்கு ஏற்படும் முதல் அனுபவம் துன்பமே. பசிக்கு உணவு உண்டதும் பசி அடங்கி மகிழ்ச்சி உண்டாகிறது. உண்ட உணவு செரித்தால் அதனினும் மகிழ்ச்சி உண்டாகிறது. 'உணவினும் உண்டது அறல் இனிது' என்று வள்ளுவர் பெருமானும் எடுத்துரைக்கின்றார். 6 'அறல்' என்றால் செரித்தல் என்று அர்த்தம். செரித்து முடிந்தால் மீண்டும் பசித்துன்பம். இன்பம் துன்பத்தில் முடிதலும், துன்பம் இன்பமாக உருமாற்றம் அடைதலும் தொடர் நிகழ்ச்சிகளாகும்.