பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 உணவின்பத்திற்கு அடுத்து எல்லா உயிர்களின் நாட்டமும் மருவிக் களித்தலில் முடிகிறது. ஆணும் பெண்ணுமாய்ப் பிறந்து வாழும் உயிரினங்கள் உரிய பருவத்தில், பருவச் செவ்வி அடைந்தும் ஒன்றை ஒன்று மருவியும், தழுவியும். பொருந்தியும் மகிழ்கின்றன. ஆண் உயிர் 'பெண்நலன்' உண்டு களிக்கிறது. பெண் உயிர் 'ஆண்நலன்' துய்த்து மகிழ்கிறது. பெண் உயிர் ஒன்றை ஏற்றுக் களிக்கிறது. ஆண் உயிர் ஒன்றை வழங்கிக் களிக்கிறது. எந்தவகையான முயற்சி உடையாருக்கும் தொழில் புரிபவருக்கும் பசியும், காமமும் பொதுவானதாகும். மனிதனைத் தவிரப் பிற உயிரினங்களிடம் உறவு முறைகளோ, ஒழுக்க நெறிகளோ இல்லை. 'மனம்' என்னும் தலைமைப் புலன் இல்லை. ஆதலால் அவைகளின் வாழ்க்கை, 'உடல்ஊழ் அளவினதாகும். மனம் படைத்த மனிதன் 'உடல் ஊழ் மற்றும் 'வினை ஊழ்' என்ற இருவகை வினையால் வாழ வேண்டிய கடப்பாடுடையவன். எனவே மனிதரில் சிலர் மேனிலை அடைகின்றனர். பலர் கீழ்நிலை எய்துகின்றனர். மனிதன் பாலுணர்ச்சியால் உந்தப்பட்டுக் கீழ்நிலை அடையாமல் மேல்நிலைக்கு உயரவே 'ஒருவன்ஒருத்தி' என்ற காமம் நுகர்தலுக்கு வேலி கோலப்பட்டது. வேலி தாண்டிய வெள்ளாடுகள் பாழாய்ப் போகின்றன. மனப்புலன் இல்லாததால் விலங்கினங்கட்கு 'ஒருவன் ஒருத்தி' என்ற நியாயம் கற்பிக்கப்படவில்லை. மேலும், அவைகளுக்கு அறிவுப் பெருக்கமும் இல்லை. எனவே, எந்த ஒழுக்கமும் கற்பிக்க இயலாது. இந்த இரண்டுமே அவைகளுக்குத் தேவையுமில்லை. அறிவு நூல் பயிற்சி உடையாருக்கும். வீடு துறந்து, காட்டில் வாழ்ந்து தவம் செய்பவர்களுக்கும் இன்ப நாட்டம் உரியதே. 'வீடுபேறு' எனும் இன்பத்தை அடைதல் அவர்கள் முயற்சியாகும். வீடுபேறு - மோட்சம் நிர்வாணம். ஐக்கியம் போன்றவை எல்லாம் பேரின்பம் என்று கூறப்படுகின்றன. அறிவு விளக்கத்தின் பயன் எல்லாம் இன்பப் பேறாகவே முடிகின்றன. எனவே அறிவைக் காட்டிலும் இன்பமே பெரியதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகிறது. உயிரினங்கள் யாவும் இன்பவழிப்பட்டு வாழ்தலையே நாடுகின்றன. விலங்கினங்களின் அறிவு பகுத்துணர்வோடு கூடாதது. உலகத்துப் பொருள்களை மட்டும் அறிவிக்கும் கருவிகளான மெய், வாய், கண்,