பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளோடு மட்டுமே இயைந்து நிகழ்தலின் சுவை, பசி, காம நுகர்ச்சி ஆகியவற்றிலேயே திருப்தியுற்றுக் காலம் கழித்துவிடுகின்றன. விலங்கினங்களின் அறிவு புறப்பொருள் பற்றிய புற அறிவு. ஆகவே அவற்றின் அறிவு மிகவும் குறுகிய அளவிலேயே சிறிதாகவே இருக்கும். அச்சிறிய அறிவினால் அவை பெறும் இன்பமும் மிகச் சிறியதாகவே இருக்கும். மக்களுக்குள்ள அறிவு புறத்தேயுள்ள உலகத்துப் பொருள்களை ஐந்து பொறிகளின் மூலமாக அறிவதுடன் அங்ஙனம் அறிந்தவற்றைத் தம் அகத்தே கொண்டுபோய் வைத்து 'இது நல்லது' 'இது தீயது' எனவும், 'இது இதனை ஒக்கும்' 'இது இதனை ஒவ்வாது' எனவும் பிரித்துணர் அல்லது பகுத்துணர வல்லதாயும் இருக்கிறது. எனவே விலங்கினங்களின் அறிவை விட எத்தனையோ பெரிதான இந்த அகப்புற அறிவினால் வரும் இன்பமும் எத்தனையோ மடங்கு பெரிதாகத் திகழ்கிறது. சிற்றறிவுடைய உயிர்கள் அவாவும் இன்பத்திற்கும், பேரறிவுடைய மக்களும் முனிவரும் அவாவும் இன்பத்திற்கும் வேறுபாடு இருக்கிறது. இன்பம் அறிவின் காரியமாகும். அஃதாவது இன்பம் அறிவினின்று விளைவதாகும். எனவே அறிவின் தரத்திற்கேற்பப் பெரியதாயும், சிறியதாயும் நிலையுளதாயும் நிலையிலாதாயும் பலதிறப்பட்டுத் தோன்றும். பொதுவாக உயிர்கள் உலகத்துப் பொருள்களின் சேர்க்கையாலும் தம்மையொத்த உயிர்களின் சேர்க்கையாலும் இன்பம் பெறுகின்றன. உயிரின் சிறுமைக்கு ஏற்ப, சிற்றின்பமும். உயிரின் பெருமைக்கு ஏற்ப, பேரின்பமும் அடைகின்றன. விலங்கினங்களுக்கு "நாளை என்ன செய்வது? நாளைக்கு உணவுக்கு எங்கே போவது?" போன்ற கவலைகள் எவையும் இல்லை. மனிதர்கள் இன்பத்துக்கு உதவியாய் நிற்கும் மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார், நண்பர் போன்றோர்களுக்காகவும் பொருள் தேடுகிறார்கள். எதிர்காலம் பற்றிய அறிவும் உணர்வும் பொருளைத் தொகுக்கத் தூண்டுகின்றன. எனவே தொழில் செய்யும் முனைப்பு ஏற்படுகிறது. ஒரு மனிதன் ஒரு தொழிலை உண்டாக்குவதால் அவனும் இன்பம் அடைகிறான். பிறனும் இன்பமடைகிறான். இன்பம் பலமடங்கு பெருக்கமடைகிறது. "தான் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந்தார்" என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இதன் பொருள் : "கற்ற அறிஞர்களின் தாம்