பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலையாமையினையும் சிற்றுயிர்களின் சிறிய இயல்பினையும் இனிது உணர்ந்து அவற்றின்மேல் சிறிதும் பற்றின்றி நிற்பர். அவர் எல்லாப் பொருள்களிலும் பெரியதாய், உயிர்ப்பொருள் உயிரில் பொருள் என்னும் எல்லாவற்றினும் நுட்பமுடையதாய், எல்லா அறிவுகளினும் மேம்பட்டதாய், தூயதாய் விளங்கும் அறிவினை உடையதாய் இருப்பர். இவ்வாறு பேரறிவு உடையதாய் விளங்குவதால் அவ்வறிவோடு பேரின்பமும் உடன் நிகழப்பெறும். பேரின்ப நிலையுமாய் என்றும் நிலைபேறாயுள்ள அழியாத முழுமுதற்பொருளாய். விளங்குகின்ற, ஒப்புயர்வில்லாத ஒரு தனிப்பெருந்தலைமைப் பெருங்கடவுளையே அறியும் நிலை பெற்றிருப்பர். அப்பேரறிவு கொண்டு அப்பேரறிவோடு ஒருங்கே நிகழும் பேரின்பப் பாற்கடலில் திளைத்த பேரின்ப உருவாய் நிலைதிரியாது அமர்ந்திருப்பர்" என்று மறைமலை அடிகள் கூறுவார். இங்ஙனம் முனிவர் பெருமக்களால் அடையப்பெறும் இன்பம் எல்லா உயிர்களும் கடைசியாக எய்துதற்குரிய முடிந்த பதமாய் விளங்கும் கடவுள் இன்பமயமானவர், அன்புமயமானவர். மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி உள்ளவர் காணவந் தருளாய் தேறலின் தெளிவே சிவபெருமானே 77 1 திருப்பெருந் துறையுறை சிவனே (மணிவாசகர்) ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே சிவபெருமான் தேனினும் தெளிவானவன். அழிவற்ற பதவிகள் யாவற்றையும் கடந்து விளங்கும் இன்ப வடிவானவன் என்கிறார் மாணிக்கவாசகர். இதன் பொருள்: தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றேன் உண்ணாதே நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்திலும் புண்ணெக ஆனந்தத் தேன் சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ திருவாசகம்) "கோத்தும்பீ! தினையளவு தேனுள்ள பூக்களில் தேனை உண்டு நீ வருந்தாதே. நினைக்குந்தோறும், காணுந்தோறும், பேசுந்தோறும்