பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நன்மை அடைந்திருக்கிறதோ அவ்வளவு அரும்பெரும் செயல்கள் அவனிடத்திருந்து பிறந்தவைகளாகின்றன; உருப்பெற்றவைகளாகின்றன. தான் ஆற்றுகின்ற பணியைப் பிறருக்குப் பயன்படும்படி மேம்படுத்தும் அளவிற்கு அது வேள்வியாகப் பரிணமிக்கிறது. மனிதன் தான் இந்த உலகிடமிருந்து பெற்று அனுபவிப்பதை விட அதிகமாக உலகுக்கு எடுத்து வழங்கவேண்டும். பெற்று அனுபவிப்பது அதிகமாக இருந்து வழங்குவது குறைவாக இருந்துவிட்டால் உலகத்துக்கு அவன் கடன் பட்டவன் ஆகிறான். உலகுக்கு ஒன்றையும் கொடுக்காமல் உலகத்திலிருந்து எல்லாம் தனக்காகவென்று ஏற்றுக்கொள்ளுவதிலேயே கண்ணுங்கருத்துமாக இருப்பவன் திருடன் போன்றவனாகிறான். இத்தகைய இழிநிலை அறிவுடையவர்களுக்குப் பொருந்தாது. கருமமோ வினையோ தன்னளவில் புண்ணியமும் அல்ல; பாபமும் அல்ல. மனப்பாங்கிற்கு ஏற்ப, எண்ணத்திற்கு ஏற்ப அது புண்ணியம் அல்லது பாவம் ஆகிறது. தீயாரைத் தகர்த்து நல்லாரைப் பேணுதற்கென்று புரியும் கொடிய போரும் புண்ணியச் செயலாகும். தேவாராதனை எனினும் தன்னலத்திற்கு மட்டுமே எனின் பாவமாகும். எந்த வினையில் ஈடுபட்டாலும் அதன் வாயிலாக உலக நன்மையும் இறைவனது பெருமையும் வெளிப்பட வேண்டும். இவ்விரண்டும் முன்னணியில் நிற்க வேண்டும். தான் தனது என்னும் செருக்கு பின்னணிக்குப் போகும் அளவு செய்யப்படும் செயல் புண்ணியத்தின் பலனை அடையும். சமைத்த உணவை மற்றவர்களுக்கு முதலில் வழங்கிய பின் எஞ்சியதை உண்பவன் உயர்ந்த மனிதனாவான். தன்னிடத்து வந்த விருந்தினரை வீட்டின் புறத்தே இருக்கச் செய்து விட்டுத் தான் மட்டும் தனித்து உண்ணுதல் அமிழ்தமாக இருந்தாலும் விரும்பத்தக்கதன்று என்று வள்ளுவர் கூறுகிறார். விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று (குறள் 82 பிறருக்கு உணவிட்ட பின் எஞ்சியதை உண்பவன் நிலம் விதையில்லாமலே விளையும் என்பார் வள்ளுவர்.