பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ? விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் குறள் 85) 89 பிறர் பசியாற்றுதல் தலைசிறந்த அறச்செயலாகும். பெரிய வேள்வியாகும். புண்ணியம் தரும் செயலாகும். மற்றவர்களோடு பங்கிட்டு உண்ண வேண்டும் என்ற எண்ணமில்லாமல் தன் வயிற்றை அடைத்துக் கொள்வதற்கு மட்டுமே உணவு சமைப்பவன் பாவ மூட்டையைச் சுமப்பவனாகிறான். பெற்ற செல்வத்தைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்துப் பலரையும் பேணி வளர்க்காமல், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்பவன் கொலை செய்தவன் ஆவான். இதை உணர்த்தவே வள்ளுவர் கொல்லாமை என்னும் அதிகாரத்தில் பகுத்துண்டு வாழும் நெறியை வைத்தார். "பசித்தவர்களுக்குப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் நூல் வல்லார் சொல்லி வைத்த அறங்கள் பலவற்றுள்ளும் முதன்மையான அறமாகும் என்பார் வள்ளுவர். பகுத்துண்டு வாழாதவன் கொலை புரிந்தவனுக்குண்டான தண்டனைக்குரியவன். முறைப்படி செய்யும் வினை, செயல் போன்றவை யக்ஞமாகின்றன. அந்த யக்ஞத்தில் செயலுக்குண்டான பலன் சூக்கும வடிவெடுக்கின்றன. வைதீக மொழியில் சூக்கும வடிவம் ‘அபூர்வம்’ ஆகும். இரண்டொரு உதாரணங்களால் இதை அறிந்து கொள்ளலாம். கடலில் உள்ள நீர் ஆவியாகிறது. அந்த ஆவி கண்ணுக்குத் தெரிவதில்லை. பிறகு மழையாக மாறிப் பொழிகின்றது. குப்பை, செத்தைகளை வைத்துக் கொளுத்தினால் அவை எரிந்து கார்பன்-டை- ஆக்சைடு வெளியேறுகிறது. அவ்வாயு கண்களுக்குப் புலனாகாது. அந்நிலையில் அது அபூர்வம். செடி, கொடிகள் அவ்வாயுவை இலைகள் மூலமாக உண்டு வளர்கின்றன. அதே பாங்கில் யாகம் மந்திர சக்தி அல்லது மனோ தத்துவத்தோடு கூடியிருக்கும் போது அது அபூர்வமாகிறது. உச்சரிக்கிற சொல் சக்தி படைத்த மந்திரமாகாது. அந்த வார்த்தைக்கு அடிப்படையாயிருக்கும் உணர்ச்சி மந்திர சக்தியாகிறது. அறச்செயல் புரிந்து வருபவர் ஆன்றோரும் சான்றோரும் ஆவர். அவரே நல்லாரும் ஆவர். அவர்களே மாசில்லாத மனம் படைத்தவர்கள். மழை வேண்டுமென்று அவர்கள் விரும்பினால் மழை பெய்யும். வேள்வியினால் மழை வருகிறது என்னும் கருத்தும் இவ்வாறே. அறத்துப்பாலுக்கு முகப்பில் வான்சிறப்பை வள்ளுவர் வைத்ததன் உட்கருத்து இதுவே. முறையாக மழை பெய்யும்போது அதன் காரணமாக உணவு விளைகிறது. உணவிலிருந்து உயிர்கள் தோன்றுவதும் வாழ்வதும் வெளிப்படை.