பக்கம்:தமிழில் தத்துவ நூல்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தோன்றியுள்ள அனைத்தும் இயற்கையின் அம்சங்களே; கூறுபாடுகளே ஆகும். எனவே இயற்கை அன்னையை எங்கும் நிறைபொருள் எனலாம். இயற்கை வித்யாசாகரம் அல்லது அறிவுக் கடல். உலகத்தின் மிகப்பெரிய குரு அல்லது ஆசிரியர் இயற்கையே என்பார் ஆங்கிலக் கவிஞர் வோர்ட்ஸ்வொர்த். அனைத்தையும் அது விளக்கம் செய்வதால், எங்கும் நிறைபொருள் என்று கூறப்படுகிறது. இயற்கையை வேதம் என்று கூறுவர். பிரபஞ்சம் முழுவதும் கர்மமயமாக இருப்பதால் கர்மம் இயற்கையின் சேய் என்று கூறலாம். இனி, இந்தக் கருமத்தைச் சிறந்த முறையில் செய்யும்போது இது வேள்வி என்று போற்றப்படுகிறது. வாழ்க்கை என்ற கர்மத்தைப் பண்புடன் முறையாகச் செய்தால் அது வேள்வியாகிறது. நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் சட்டத்திற்குட்பட்டு நடந்தால் ஆட்சிமுறை சிறப்படைகிறது. அங்ஙனம் உயிர்கள் எல்லாம் நற்செயல்களாகிய யக்ஞம் செய்தால் தொகைவினை சொரூபமாகவுள்ள இயற்கை சிறப்புற்று விளங்குகிறது. உயிர்கள் பலன் கருதிச் செய்யும் கருமத்தால், வினையால், வேள்வியால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணுகின்றனர். வளம் பெறுகின்றனர். பலனில் கருத்தூன்றாமல் பலனை எதிர்பாராமல் செய்தால் வளமான வாழ்க்கையோடு பெரும்பேறு ஆகிய முக்தியையும் அடைகின்றனர். பலன் எதிர்பார்த்தோ, பலன் கருதாமலோ கருமம் என்னும் யக்ஞம் செய்கின்ற அளவு இயற்கை தெய்வ சொரூபமாக மிளிரத் தொடங்குகிறது. நல்வினையை நல்லெண்ணத்துடன் ஆற்றுங்கால் இந்தப் பூலோகம் சொர்க்கலோகமாக மாறிவிடுகிறது. இயற்கையின் பெருந்திட்டமும் இதுவே. அவ்வை மூதாட்டி, எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே! என்று கூறியுள்ளதும் கருதத்தக்கதாகும். (ஆடவர் - குடிமக்கள்) மதிப்புக் குறைந்த பண்டங்களை. பொருள்களைப் பண்படுத்தி மதிப்புள்ள பொருள்களாக மாற்றித் தருவது தொழிற்சாலையின் பணி மற்றும் நோக்கம் ஆகும். அங்ஙனமே தோற்றத்திற்கு வந்துள்ள உயிர்களை ஓம்பி மேம்படுத்துவதற்கு உறுதுணையாய் இருப்பது இயற்கைச் சக்கரம். பாடம் படித்து முன்னேற்றம் அடையாவிட்டால் மாணவன் ஒருவன் பள்ளிக்கூடம் சென்று வந்திருந்தாலும் பள்ளிக்கூடத்துக்குப் போகாதவன் ஆகிறான். பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான். ஓர் ஊருக்கு ஒரு