பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பக்கத்தில் மிகுதியான வரிகள் அடங்கும். காட்டாக, 'மறிந்திழியும்' என்னும் பழைய வடிவெழுத்துக்கள் 12 கூரானால் (பாயின்ட்), இவற்றின் புதிய வடிவம் 6 கூரில் அடங்குமன்றோ? வரிகளும் கோடு போட்டாற்போல ஒரே ஒழுங்காக அமையும். புதிய வடிவெழுத்துக்கள் 1. உயிர் (அ-) 10 2. அகர வுயிர்மெய் (க-ன) 18 3. மெய் (க்-ன்) 18 4. ஆய்தம் ( 0%) 1 ஆக-47 131வடிவெழுத்துக்களில் 47 போக, (131-47=)84 வடிவங்கள் (எழுத்துக்கள்) குறைகின்றன. அகரவுயிர் மெய் தெரிந்த பின்னர், 'க்' என்னும் ஒரு மெய்யெழுத்துத் தெரிந்தால் - கற்றுக்கொண்டால் -ஏனையவற்றை அவ் வாறே சொல்லத் தெரிந்து கொள்ளலா மாகையால், 47 இல் 17 போக, 30 வடிவங்களே ஆகின்றன. இந்நாற்பத்தேழு வடிவங்களுள் தமிழ் ஒலியெழுத் துக்கள் 247 உம், வடிவெழுத்துக்கள் 131 உம் அடங்கு வதால், இவ்வாறு திருத்தி யமைத்துக் கொள்ளுதல் தமிழ் மொழி வளமும் வளர்ச்சியும் பெறுதற்கு ஏற்ற வழி யாகும்.