உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 ஆங்கில ஒலி வடிவு 26 எனினும், ஒரே எழுத்துப் பல வகையாக ஒலிக்கும் வேற்றொலிகளையும், பல எழுத்துக்கள் சேர்ந்து ஓரெழுத்தாக ஒலிக்கும் கூட் டொலிகளையும் நோக்கின், ஆங்கில எழுத்தைவிடத் தமிழெழுத்துக்கள் குறைவேயாகும். ஆங்கில வரிவடிவு- அச்செழுத்துப் பெரிது சிறிது, கையெழுத்துப் பெரிது சிறிது ஆக (26×4=) 104 ஆகின்றன. எனவே, ஆங்கிலத் தனி ஒலியெழுத்தைவிடத் தமிழெழுத்துச் சொல்லத் தெரிந்துகொள்வதில் (32-26) 6 மிகுதியே யெனினும், எழுதுவதில், எழுதத் தெரிந்துகொள்வதில் (104-30) 74 குறைவாக உள்ளது. மேலும், ஆங்கிலம் போலப் படிப்பது வேறு, எழுதுவது வேறு என்னும் வேறுபாடும், எழுத்துக் கூட்டும் முறையும் தமிழெழுத் திற் கில்லை. 131 வடிவங்கள் 47 ஆகக் குறைந்திருப்பதால், சொல்லவும் எழுதவும் தெரிந்து கொள்ளும்-கற்றுக் கொள்ளும் - காலம் மிகக் குறையும், கற்போர்க்கு, 'இத்தனை எழுத்தா!' என்னும் மலைப்பு நீங்குமாகையால், கற்பதில் விருப்பஞ் செல்லும். செல்லவே, குறைந்த காலத்தில், எளிதில் தமிழ் எழுத்தறிவைப் பெறும் பெரும்பயன் உண்டாகும். அச்சுக் கோப்பதும் தட்டெழுத்தடிப்பதும் எளிதாகும். எனவே, தமிழ்மொழி மேம்பாடுறும் என்பது ஒருதலை. அயலெழுத்தாக்கம் தமிழர்களாகிய நாம் இனி உலகத்தொடர்பின்றித் தனித்து வாழ முடியாது. உலக வரலாற்று நூல், நிலநூல் முதலியவற்றைக் கற்றறிதல் வேண்டும். சிறந்த அயல் மொழி இலக்கியங்களைத் தமிழாக்கிப் பயிலுதல் வேண்