பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 டும். அயல்மொழி அறிஞர்களின் கண்டுபிடிப்புக்களான அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதவேண்டும். எனவே, ஆங்கில முதலிய அயல்மொழிச் சொற்களான மக்கட்பெயர், இடப் பெயர், சிறப்புப்பெயர் முதலியவற்றைத் தமிழில் வழங்காம லிருக்க முடியா. ஆனால், அவ்வயல் மொழி களின் பெயர் வினைகளாகிய பொதுச்சொற்களை எக் காரணங்கொண்டும் கலந்து தமிழின் தனித்தன்மையைக் கெடுக்கக் கூடாது. எனவே, தமிழெழுத்துக்களால், அவ்வயல்மொழிச் சிறப்பொலி யெழுத்துக்களுக்கேற்ற தமிழாக்கஞ் செய்து கொள்ளுதல் வேண்டும். 1. 1. வடவெழுத்தாக்கம் ஹ, ஸ, ஷ, ஜ, க்ஷ. இவ்வைந்தும் வடமொழிச் சிறப்பெழுத்துக்கள். ஹ - ஆய்த வெழுத்து ஹகர வொலியோ டொத்து இருத்தலான், ஹகரத்திற்கு ஆய்தத்தைக் கொள்ள லாம். காட்டு : ஹோமர்- ஃோமர். பஹ்ருதீன் - பஃருதீன். 2- ஸ ஆய்தமும் சகரமும் சேர்ந்து ஸகரவொலி யாகும். இது பெரும்பாலும் தமிழில் மெய்யாகவே வழங்கும்.