பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 காட்டு: ஸ்பெயின் ஃச்பெயின். 3. ஹிராஸ் - ஹிராஃச் ஷ - டகரமும் சகரமும் ஷகர வொலியாகும். மெய் யெனில் இரண்டையும் புள்ளியிட் டெழுதவேண் டும். உயிர்மெய் யெனில் டகரத்திற்கு மட்டும் புள்ளியிட வேண்டும். காட்டு: ரஷ்யா - ரட்ச்யா. பெர்னாட்ஷா- பெர்னாட்ட்சா. 4. சகரமும் ஞகரமும் ஜகரவொலியாகும். உயிர் மெய்யெனில் சகரத்தைப் புள்ளியிட்டும், மெய் யெனில் இரண்டையும் புள்ளியிட்டும் எழுத வேண்டும். காட்டு: ஜப்பான்-ச்ஞப்பான். அர்ஜுனன். அர்ச்ஞுனன். ஜார்ஜ்-ச்ஞார்ச்ஞ். 5. க்ஷ - இது 'க்ஷ' என்னும் ஈரெழுத்தா லாகியதால், ‘க்ட்ச்' என எழுதவேண்டும். ககர டகரங்கட்குப் புள்ளியிட வேண்டும். காட்டு: அக்ஷய-அக்ட்சய. லக்ஷிமி - லக்ட்சிமி.