பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 முடிவுரை காலத்திற் கேற்ற மாற்றத்தை மேற்கொள்வதே நாக ரிக முறையாகும். சென்ற அரை நூற்றாண்டுக்குள் உலகம் எவ்வாறு மாறுபாடடைந்துள்ளது என்பதை எண்ணிப் பார்க்கின் இதன் உண்மை விளங்கும். அமெரிக்கர் எழுத்துக் கூட்டும் வழக்கத்தை விட்டு விட்டனர். துருக்கியர் துருக்கி எழுத்தை விட்டு ஆங்கில எழுத்தை இட்டு வழங்கி வருகின்றனர். மலையாள மொழிக்கு எழுத்தச்சன் என்பார் புதிதாக எழுத்தாக்கினார். ரஷ்யர் கள் தங்கள் நாட்டில் வழங்கும் பல மொழிகட்கு அண் மையில் புதிதாக எழுத்தாக்கி யுள்ளனர். வீரமாமுனிவர் செய்த சில எழுத்து வடிவ மாற்றங்களை அக்காலத் தமிழ்ப் பெருமக்கள் ஏற்றுக்கொண் டுள்ளனர். எழுத்து என்பது மொழி வழக்கத்திற் குரிய ஒரு கருவியே யாகும். பழையன கழிதலும் புதியன புகுதலும்' தொன்று தொட்ட மரபே யாகும். இவ்வெழுத்துச் சீர்திருத்தம், பழைய முறையை மேற்கொள்வதே யன்றிப் புதியன புகுத்தலும் அன்று. ஆகவே, தம் தாய் மொழியாந் தமிழ்மொழியை மேம்பாடுறச் செய்ய விரும்பும் தமிழ்ப்பெருமக்கள் இச் சீர்திருத்தத்தை விரும்பி யேற்றுக்கொள்வ ரென்பது ஒருதலை. தமிழ் எழுத்தாளர் பெருமக்களும், தமிழ் எழுத்தா ளர் சங்கத்தவரும், தமிழ் நாளிதழ் ஆசிரியர்களும் வார மாத இதழ் ஆசிரியர்களும், தமிழக வானொலி நிலை யத்தாரும் இத்தமிழ்ப் பெரும் ஆக்கப் பணிக்கு இயன்ற துணைபுரியக் கடமைப்பட்டவராவர். இத்தாய்மொழித் தொண்டில் பங்கு கொள்ளுதல் தமிழறிஞர்களின் கடமை யாகும். இத்தமிழ் வளர்ச்சிப் பணியில் கருத்தைச் செலுத்துதல் தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் முன்னிற்கும்