உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 முதல் வேலையாகும். அச்செழுத்து வார்ப்புத் தொழிலகத் தாரும் (டைப் பவுண்டரி), அச்சக உரிமையாளர்களும், தட்டெழுத்துத் தொழிலகத்தாரும் இத்தமிழ் வளர்ச்சிப் பணியின் பங்காளிகளாவர். இத்தாய் மொழி ஆக்கப் பணியை மேற்கொள்ளுதல் தமிழ்மொழி ஆக்கத்தில் அளவு கடந்த ஆர்வமும் அக் கறையும் உடைய தமிழக அரசின் தலையாய கடமை யாகும். தமிழ்ப் பெருமக்களும் தமிழக அரசும் இத்தமி ழாக்கப் பெரும் பணியை மேற்கொள்ளின், நம் அருந்தமிழன்னை உறுங்குறை யொன்றின்றிச் சீருஞ் சிறப்புடன் திகழ்வாளென்பது திண்ணம். தமிழ் வாழ்க! "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே." -நன்னூல் சூத்திரம்