பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழ் எழுத்துக்களின் இயல் பொலியே தமிழ்மொழியின் இவ் வினிமைத் தன்மைக்குக் காரணமாகும். பேசவும் எழுதவும் படுதல், பழமையும் இளமையும் உடைமை, பழைமை சான்ற இலக்கியப்பரப்பும் இலக்கண வரையறையும் உடைமை ஆகிய இம் முத்தன்மையும் உடைய மொழி உலகில் தமிழ்மொழி ஒன்றேயாகும். "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன் தோன்றி" இன்னும் "உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதை யாச் சீரிளமைத் திறம் வாய்ந்தது" நம் செந்தமிழ் மொழியே யாகும். முன்னைப் பழமொழிக்கும் முன்னைப் பழமொழியாயும், பின்னைப் புதுமொழிக்கும் பின்னைப் புதுமொழியாயும் பொலி வது நம் கன்னித் தமிழ்மொழியே யாகும். தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள பல மொழிகட்கும் முதன்மையாந் தன்மையுடைய மொழி உயர்மொழி எனப் படும். பிற மொழிகளின் உதவியின்றித் தனித்தியங்கும் தகுதி யுடைய மொழி தனிமொழி எனப்படும். திருந்திய பண்பும் சிறந்த நாகரிக வழக்கமும் உடைய மொழி செம்மொழி எனப் படும். தமிழ்மொழி இம் முப்பண்பும் ஒருங்குடைய உயர்தனிச் செம்மொழி யாக இருந்தும், "தமிழ்மொழி எழுத்து மிகுதியுடைய மொழி" என்னும் ஒரு சிறு குறைபாட்டினை யுடையதாக இருந்து வருகிறது. தமிழ் எழுத்துக்களெல்லாம் இயல் பொலி யுடையவாகவே - மக்கள் வாயினின் றியல்பாக எழும் இயல் பொலிக் குட்பட்டே-அமைந்துள்ளன. தமிழ் எழுத்துக்களின்