உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழெழுத்துச் சீர்திருத்தம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வடிவங்களே - வடிவெழுத்துக்களே - மிகுதியாக உள்ளன. எனவே, தமிழ் வடிவெழுத்துக்களின் அளவினைக் குறைத்து, அச்சிறு குறைபாட்டினைப் போக்கித் தமிழ்மொழியை யாதொரு குறையு மில்லாத நிறைமொழியாகத் திகழும்படி செய்வது தமிழ் மக்களின் இன்றியமையாக் கடமையு ளொன் றாகும். 1934 இல் சென்னையில் நடந்த தமிழன்பர் மாநாட்டில், தமிழெழுத்துச் சீர் திருத்தம் பற்றி ஒருதீர்மானம் நிறைவேற்றப் பட்டு, அதற்காக ஒரு குழுவும் நிறுவப்பட்டது. அம்மாநாட்டுத் தீர்மானத்தைப் பெரியார் அவர்கள் நடைமுறைக்குக் கொண்டு வந்தார்; அதாவது, விடுதலை நாளிதழில், 'ணா னா ணைனை லைளை' என்னும் ஏழெழுத்துக்களையும், 'ணா, னா, றா, ணை, னை, லை, ளை' என வெளியிட்டார். 18,19-1-1941 இல் மதுரையில் நடந்த தமிழ் இலக்கிய மாநாட்டிலும், தமிழெழுத்துச் சீர் திருத்தம்பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, 'தமிழெழுத்துச் சீர்திருத்தக் குழு' என ஒரு குழுவும் நிறுவப்பட்டது. 14,15-2-1948 இல் சென்னையில் நடந்த அகிலத் தமிழர் மாநாட்டிலும் இது பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தோடு, 'தமிழெழுத்துச் சீர்திருத்தக் குழு' ஒன்றும் நிறுவப் பட்டது. இம் மாநாட்டுத் தீர்மானப்படி, சுதேசமித்திரன் நாளிதழில், இகர ஈகார, உகர ஊகார உயிர்மெய்யெழுத்துக் கள் தனி உயிர்க் குறியுடன் வெளியிடப்பட்டன. இதற்கு முன்னரே, சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியரான, திரு. கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் .