உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்

1




பாடம்-1

தமிழ் எழுத்துகள் அறிமுகம்

1

1.0 முன்னுரை

நமது எண்ணங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காக உருவானவை மொழிகள். முதலில் சைகைகளும், ஒலிகளும் கருத்துகளைப் பரிமாறப் பயன்படுத்தப்பட்டன. பின்னர், ஒலிகள் மெதுவாக உருமாற்றம் அடைந்து மொழியாக மாறின.

வாய்ந்ததாய்

இவ்வாறு உருமாற்றம் அடைந்து வளர்ந்த மொழிகளில் இனிமையானதும், வாழ்வியலோடு இணைந்ததுமாய் விளங்குவது விளங்குவது தமிழ்மொழி. இவ்வாறு, சிறப்பு வாய்ந்ததாய் விளங்கும் தமிழ்மொழியின் எழுத்துகள், அவற்றின் ஒலிப்புமுறை, உருவ அமைப்பு ஆகியவற்றைப் பற்றி நாம் இங்கு அறிந்துகொள்வோம்.

1.1 எழுத்துகளின் வகைதொகை

தமிழ் எழுத்துகள் உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் என நான்கு பிரிவுக்குள் அடங்கும். இவற்றின் பெயர் அடிப்படையில் இவற்றிற்குரிய பொருள் விளக்கத்தை நாம் தெரிந்துகொள்வோம்.

மொழிக்கு உயிர்போல் விளங்குபவை, உயிர் எழுத்துகள். 'அ' முதல் 'ஔ' வரையிலான பன்னிரண்டும் உயிர் எழுத்துகள்.

மொழிக்கு உடல்போல விளங்குபவை, மெய் எழுத்துகள். 'க்' முதல் 'ன்' வரையிலான பதினெட்டும் மெய் எழுத்துகள்.

உடலும் உயிரும் இணைந்து மனிதன் உருவாவதுபோல, உருவாகும் எழுத்துகளே உயிர்மெய் எழுத்துகள். 'க' முதல் 'னௌ' வரையிலான 216 எழுத்தும் உயிர்மெய் எழுத்துகள்.

க்+அ = க

க்+

க் + ஆ = கா

என 216 உயிர்மெய் எழுத்தும் உருவாகும்.

மனிதர்களின் உருவத்தை நாம் காணலாம். ஆனால், அவர்களின் உயிரினைக் காண முடியாது. அவர்களது அசைவின் மூலமும் பேச்சின் மூலமும் அவர்களின் உயிரை நாம் உணர முடியும். அதுபோலவே 'க்' என்னும் மெய்யைக் கண்ணால் காணலாம். 'அ' என்னும் உயிரை ஒலிக்கும்போது உணர முடியும்.

மெய்யெழுத்துடன் உயிரெழுத்துச் சேரும்போது புதுஎழுத்துப் பிறக்கிறது. ஆனால், அதை நாம் மெய்யுயிர் என்று சொல்வது இல்லை. ஏனெனில், 'க' என்பதில் 'அ' என்னும் உயிரே